மக்களை தினமும் ஏமாற்ற முடியாது..!

மக்களை தினமும் ஏமாற்ற முடியாது

மக்களை தினமும் ஏமாற்ற முடியாது, ஆம் மக்களை தினமும் ஏமாற்றிக் கொண்டு இருக்க முடியாது. இவ்வாறு கூறுவதற்கு காரணம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஸ்பெய்ன் நாட்டு அரசர், அரசி மற்றும் பிரதமாருக்கு அந்நாட்டு மக்கள் சேற்றால் அடித்து துரத்திய சம்பவம் தான்.

கடந்த வாரத்தில் ஸ்பெய்னின் வலன்சியா பிரதேச மக்கள் வௌ்ள அனர்த்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டனர். வௌ்ள அனர்த்தம் ஒருவாரு குறைந்ததும் ஸ்பெய்ன் நாட்டு அரசர், அரசி ஆகியோர் பய்பொட்ரா நகரத்திற்கான விஜயமொன்றை மேற்கொண்டனர். அவர்களுடன் ஸ்பெய்னின் பிரதமரும் சென்றுள்ளார். அங்கு பாதிக்கப்பட்ட மக்கள் அரசர், அரசி மற்றுமன்றி பிரதமருக்கும் சேற்றால் அடித்து தமது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

நாட்டு மக்கள் இங்கு செத்து மடிகின்றனர், எமக்கு இங்கு உண்பதற்கு உணவும் இல்லை குடிப்பதற்கு தண்ணீரும் இல்லை உங்களுக்கு மட்டும் அனைத்து சுகபோக வசதிகளும் உள்ளது. இப்போது தானா எங்களை ஞாபகம் வந்தது என அம்மக்கள் காட்டிய கடும் எதிர்புக்கு மத்தியில் அரச குடும்பத்தினருக்கு அங்கிருந்து தப்பியோட வேண்டிய நிலை ஏற்பட்டது. பிரதமரும் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.

அது தான் ஸ்பெய்ன் நாட்டு மக்கள். இந்த திடீர் வௌ்ள அனர்தத்தினால் ஏற்பட்ட பெரும் பாதிப்பும், இழப்புகளும் தான் அம்மக்களை இவ்வாறு அரச குடும்பத்திற்கும் சேர்த்து தமது எதிர்பை வௌிக்காட்டுவதற்கான சூழல் ஏற்பட்டது.

இப்போது எமது நாட்டை பார்ப்போம், எமது நாட்டை 76 வருட காலம் ஆட்சி செய்த ரணில் விக்ரமசிங்ஹ, மகிந்த ராஜபக்‌ஷ உட்பட பிரதான இரண்டு அரசியல் கட்சிகளும், பல்வேறுப்பட்ட கூட்டனிகளும் 76 வருட காலம் ஆட்சி செய்து இப்போது எமக்கு எதை விட்டு வைத்துள்ளனர்? தற்போதாவது நாம் கட்டயாமாக அதனை அறிந்து தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆம் நமது நாட்டு மக்கள் ஸ்பெய்ன் நாட்டு மக்களை விட மிகவும் நல்லவர்கள் என்று அப்போது தான் ரணில், ராஜபக்க்ஷ போண்ற அரசியல்வாதிகள் விளங்கிக் கொள்வார்கள். ஏனெனில் இன்றும் கூட அவர்களின் முல்லாக் கதைகளை கேட்பதற்கு 100, 200 நபர்களாவது அவர்களின் கூட்டங்களுக்கு வருகின்றார்களே.

இங்கு கூறப்போவது ஏதோ சில விடயங்கள் மட்டும் தான் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இந் நாட்டின் 76 வருட கால சாரம்சத்தின் ஒரு சிறு பகுதி மட்டுமே.

எமது நாட்டு சனத்தொகையில் 26% வீத மக்கள் வறுமை கோட்டிற்குக் கீழ் வாழ்கின்றனர். ஆறு வயதிற்கு உட்பட்ட பிள்ளைகளில் 20% பிள்ளைகள் போஷாக்கு குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த தரவுகள் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய நிறுவனத்தினால் வௌியிடப்பட்டுள்ளது.

மக்களின் கண்களை குருடாக்கிய, தடுப்பூசிகள் மூலம் மக்கள் செத்து மடிந்த மருந்து மாபியாக்கள் செயல்படும் ஒரு நாடு இது, தடுப்பூசி மருந்துக்கு பதில் வெறும் தண்ணீரை கொண்டு வந்து அவர்கள் நாட்டிற்கு உண்டாக்கிய இழப்பு சுமார் 600 கோடிகளுக்கும் அதிகமாகும். கணக்காய்வு அறிக்கையின படி 80-க்கும் மேற்பட்ட மருந்து கொள்முதல் நடைமுறைகள் ஊழல் நிறைந்தவை.

எமது நாட்டிற்கு கொண்டுவரப்படும் மருந்து வகைகளில் 95% வீதமான மருந்துகள் அவைகளின் தரத்தை சரிபார்த்து கொண்டு வரப்படுவதில்லை. அதாவது பரிந்துரைக்கப்பட்ட மருத்துவ பரிசோதனைகள் எதுவும் கிடையாது. உண்மையில் அவர்கள் அப்பாவி நோயாளிகளை மரணத்தின் பால் கொண்டு செல்லும் கொலைகாரர்கள் என்று தான் கூற வேண்டும். அந்தளவிற்கு அவர்கள் குற்றவாளிகளாக காணப்படுகின்றனர்.

கணக்கீட்டின் படி நாட்டு மக்கள் தொகை இரண்டு கோடியே இருபது இலட்சமாகும். இதில் 61 இலட்சம் மக்களின் வாழ்க்கை தரம் நிலையற்றது, கவலைக்கிடமானது. நாட்டு மக்கள் தொகையில் 0.73% வீதத்திற்கும் அதிகமானோர் இன்றும் ஓலை அல்லது பணை குடிசைகளில் வாழ்ந்து வருகின்றனர்.

4.56% அதிகமான மக்கள் இன்றும் தற்காலிக கொட்டகைகளில் வாழ்கின்றனர். அதே போல் 6.35% வீத மக்கள் கட்டி முடிக்கப்படாத அரைகுறை வீடுகளில் வசிக்கின்றனர். ஒன்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் ஓரே வீட்டில் வாழும் எண்ணிக்கை மிகவும் அதிகமாக காணப்படுகின்றது.

கொழும்பு நகரத்தில் மட்டும் வீடுகளுக்கான தேவை 27000 என கணக்கிடப்பட்டுள்ளது. இன்று Three Idiots பற்றி ஏதோ பெரிதா பேசுகின்ற அவர்கள், அதாவது 150 Idiots களிடம் ஆலோசனை பெற்ற ரணில் விக்ரமசிங்ஹவை மாத்திரம் எடுத்துக் கொண்டாலும் கொழும்பில் அவர் எவ்வளவு காலம் அரசியல் செய்துள்ளார்? கொழும்பில், நாட்டின் தலைநகரத்தில் குடிசைகளில் சொல்லனா துயரங்களுடன் வாழும் பிள்ளைகள் எவ்வளவு இருக்கின்றனர்? இவை எல்லாம் தெரியுமா என்று அவரிடம் கேட்டுதான் பாருங்களேன்.

மத்திய வங்கி கொள்ளை மாத்திரம் 16 பில்லியனை தாண்டுகின்றது. சீனி வரி மோசடியானது 17 பில்லியனுக்கு அதிகம். அது மாத்திரமல்ல மென்டிஸ் நிறுவனம் மாத்திரம் 3500 கோடி ரூபா மதுபான வரியை செலுத்தியில்லை. முன்னால் ஜனாதிபதிகளின் பராமரிப்பு செலவு மாத்திரம் வருடத்திற்கு 27 தொடக்கம் 30 கோடிகள் வரை செலவிடப்படுகின்றது.

அதிவேக நெடுஞ்சாலை ஊழல், உரம் இறக்குமது ஊழல், கொரோன தடுப்பூசி மோசடி, எயாபஸ் கொடுக்கல் வாங்கல் மோசடி, அவன்காட் கொடுக்கல் வாங்கல் மோசடி, நிலக்கரி இறக்குமதி மோசடி, இவ்வாறு கூறப்போனால் ஒரு லாரியின் அளவுக்கு கடந்த கால ஊழல், மோசடி, மற்றும் அநாவசிய செலவுகளைப் பற்றி கூறிக் கொண்டே போகலாம்.

இப்படியாக ஒரு நாட்டை சீர்குழைத்து நசமாக்கிய அவர்களின் முல்லாக் கதைகளை கேட்பதற்கும், அவர்களின் பின்னால் அடிமைகளாகவாவது செல்வதற்கு இன்னும் 100 அல்லது 200 பேர் இருப்பதையிட்டு அவர்கள் சந்தோசப்பட வேண்டும்.

ஏனெனில் ஸ்பெய்னைப் போல் மக்கள் இங்கு இருந்தார்களேயானால் இவர்களை லாறி கணக்கில் சேற்றால் அடிப்பார்கள்.


SARINIGAR WM

Follow us to get more useful articles like this soon. Subscribe to our SARINIGAR website. Also like our Facebook Page & WhatsApp channel. Post your valuable comments below. & Share with your friends too. Thanks!

Leave a Reply

error: Content is protected !!