உலகின் மிகப்பெரிய 10 ஆறுகள்

ஆறுஇந்த உலகின் வரலாற்றை வடிவமைப்பதில் ஆறுகள் மிகவும் முக்கியமானவையாக காணப்படுகின்றது. பெரும்பாலான பண்டைய மற்றும் மிகவும் வளர்ந்த சமூகங்கள் இந்த ஆறுகளில் சிலவற்றின் ஓரங்களில் உருவாகி வளர்ந்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நதிகள் வளர்ச்சியடைந்த நாகரிகங்களின் அடிப்படையாகவும். விவசாயம், குடிநீர், போக்குவரத்து ஆகியவற்றுக்கு அவசியமானதாகவும்.
அமேசான், யெனீசீ போன்ற நதிகள் உலகின் கார்பன் சமநிலையை பராமரிக்க பெரும் பங்கையும் ஆற்றி வருகின்றது.

மேலும் இந்த ஆறுகள் பல்வேறு பேரரசுகளின் எழுச்சி மற்றும் வீழ்ச்சியையும், வெற்றி மற்றும் தோல்வியடைந்த பல சண்டைகளையும் கண்டுள்ளது.

இந்த ஆறுகள் மனிதகுலத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது, ஏனெனில் அவை உணவு, குடிநீர், ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு மதிப்புமிக்க பொருட்களை கொண்டு செல்வதற்கான பாதை மற்றும் வளமான நிலத்தையும் வழங்குகின்றது. அத்துடன் அவை பல்வேறு விலங்குகளுக்கு ஒரு வீடாகவும் காணப்படுகின்றது.

நீளம், வடிகால் பகுதி மற்றும் அவற்றின் சராசரி வெளியேற்றம் ஆகியவற்றின் அடிப்படையில் தரவரிசைப்படுத்திய பூமியின் முதல் பத்து பெரிய ஆறுகளை நாம் இங்கு பார்ப்போம்.

01. அமேசான் நதி:
நீளத்தில் இரண்டாவது, ஆனால் பரப்பளவில் மிகப்பெரியது. உலகின் மிகப்பெரிய காடான அமேசான் காடை ஊட்டுகிறது.

நீளம் (கிமீ): 6,992
வடிகால் பரப்பளவு (கிமீ²): 7,050,000
சராசரி வெளியேற்றம் (மீ³/வி): 209,000

மழை பெய்யும் போது சில பகுதிகளில் கிட்டத்தட்ட 30 மைல்கள் தூரத்தை எட்டும் அதன் அகலம் மற்றும் அளவைப் பொறுத்த வரை இது உலகின் மிகப்பெரிய நதியாகும். இந்த நதி பல்வேறு வகையான மீன் இனங்கள், மரங்கள், தாவரங்கள் மற்றும் விலங்குகளுக்கு தாயகமாக காணப்படுகின்றது.

இது தோராயமாக 6,992 கிலோமீட்டர் நீளம், சுமார் 7,050,000 கிலோமீட்டர் சதுர வடிகால் பரப்பளவு மற்றும் வினாடிக்கு சராசரியாக 209,000 கன மீட்டர் நீர் வெளியேற்ற பரப்பளவு கொண்டது, இதன் முதல் வெளியேற்றம் அட்லாண்டிக் பெருங்கடலாகும்.

இருப்பினும், காலநிலை மாற்றங்கள் ஆறுகளில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. இதனால் நதிகளின் வளங்களுக்கும் உலகெங்கிலும் உள்ள பில்லியன் கணக்கான மக்களுக்கான நீர் விநியோகத்திற்கும் குறிப்பிடத்தக்க வகையில் அச்சுறுத்தலாக உள்ளது.


02. நைல் நதி:
உலகின் மிக நீளமான நதி. எகிப்தின் நாகரிக வளர்ச்சிக்கு அடிப்படை.

நீளம் (கிமீ): 6,853
வடிகால் பரப்பளவு (கிமீ²): 3,254,555
சராசரி வெளியேற்றம் (மீ³/வி): 2,800

நைல் நதி 6,853 கிலோமீட்டர் நீளமும் தோராயமாக 3,254,555 சதுர கிலோமீட்டர் வடிகால் பரப்பளவையும் ஒரு சதுரத்திற்கு சராசரியாக 2,800 கன மீட்டர் நீர் வெளியேற்றத்தையும் கொண்ட உலகின் இரண்டாவது பெரிய நதியாகும்.

இது சஹாரா பாலைவனம் வழியாகப் பாய்ந்து மத்தியதரைக் கடலில் அதன் தண்ணீரை ஊற்றுகிறது. இதற்கு இரண்டு துணை நதிகள் மட்டுமே உள்ளன: எத்தியோப்பியாவில் உள்ள நீல நைல் மற்றும் சூடானில் சந்திக்கும் ருவாண்டாவின் வெள்ளை நைல் இதன் துணை நதிகளாகும்.

இந்த நதியைச் சுற்றி லக்சர், கார்ட்டூம், கெய்ரோ மற்றும் அஸ்வான் ஆகிய முக்கிய குடியிருப்புகள் காணப்படுகின்றது . இது கென்யா, சூடான், புருண்டி, தெற்கு சூடான், காங்கோ, எரித்திரியா, உகாண்டா, ருவாண்டா, தான்சானியா, எகிப்து மற்றும் எத்தியோப்பியா ஆகிய பதினொரு நாடுகள் வழியாகவும் பாய்கின்றது.

நைல் நதி பொதுவாக உலகின் மிக நீளமான நதியாகக் கருதப்படுகிறன்து, இருப்பினும், பிற முரண்பாடான ஆதாரங்களின் அடிப்படையில் தென் அமெரிக்காவில் உள்ள அமேசான் நதிக்கு உலகின் பெரிய நதி என்ற பெயரை 2007 ஆம் ஆண்டு மேற் கொள்ளப்பட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றது.


03. யாங்சி நதி:
சீனாவின் பொருளாதாரத்துக்கும் கலாச்சாரத்துக்கும் முக்கியமானது.

நீளம் (கிமீ): 6,300
வடிகால் பரப்பளவு (கிமீ²): 1,800,000
சராசரி வெளியேற்றம் (மீ³/வி): 31,900

யாங்சே உலகின் மூன்றாவது பெரிய நதியாகவும் சீனாவின் மிகப் பெரிய நதியாகவும் காணப்படுகின்றது, மேலும் இது ஒரு கண்கவர் அழகிய நதியாகும், அதன் இரு கரை நெடுகிழும் கலாச்சாரம் மற்றும் இயற்கைக் காட்சிகளைக் கொண்ட பரந்த அளவிலான சுற்றுலா தளங்களைக் கொண்டுள்ளது.

இது தோராயமாக 6,300 கிமீ நீளமும், 1,800,000 கிலோமீட்டர் சதுர வடிகால் பரப்பளவையும், வினாடிக்கு சராசரியாக 31,900 கன மீட்டர் நீர் வெளியேற்றதையும் கொண்டது.

யாங்சே டாங்குலாவிலிருந்து மேற்கு சீனாவில் உள்ள கிங்காய் என்ற மாகாணத்தில் உருவாகி, ஷாங்காய், சோங்கிங், யுன்னான், ஹுனான், திபெத், ஜியாங்சு, சிச்சுவான், ஹூபே, கிங்காய் மற்றும் அன்ஹுய் ஆகிய பதினொரு பகுதிகள் வழியாக சென்று கிழக்கு சீனக் கடலில் கலக்கின்றது.


04. மிசிசிப்பி–மிசூரி:
அமெரிக்காவின் மையப் பகுதியை ஊடறுத்து பாய்கிறது.

நீளம் (கிமீ): 6,275
வடிகால் பகுதி (கிமீ²): 2,980,000
சராசரி வெளியேற்றம் (மீ³/வி): 16,200

இது உலகின் நான்காவது பெரிய நதியாகும். மேலும் இது முழு அமெரிக்காவிலும் பாய்கின்றது. மிசிசிப்பி நதி தெற்கு நோக்கி 2,320 மைல்கள் மெதுவாக பாய்கின்யறது.

இந் நதியின் மேற்கில் உள்ள மிசௌரி நதி மற்றும் கிழக்கில் உள்ள ஓஹியோ நதி முக்கிய துணை நதிகளாக காணப்படுகின்றது.

இது அமெரிக்காவில் 31 மாநிலங்கள் மற்றும் கனடாவில் இரண்டு மாகாணங்களுக்குள் பாய்கின்றது. இந் நதியானது உலகில் மிகவும் சுறுசுறுப்பான வணிக நீர்வழிகளில் ஒன்றாவும் காணப்படுகின்றது.


05. யெனீசீ, ஓப் ஆறு:
சைபீரியாவின் பெரும் பனிப்பகுதிகளை கடந்து பாய்கின்றன.

நீளம் (கிமீ): 5,539
வடிகால் பரப்பளவு (கிமீ²): 2,580,000
சராசரி வெளியேற்றம் (மீ³/வி): 19,600

இது உலகின் 5வது பெரிய நதியாகவும் சீனாவின் இரண்டாவது பெரிய அகலமான நதியாகவும் காணப்படுகின்றது, இதன் நீளம் சுமார் 5,539 கிலோமீட்டராகவும் வடிகால் பரப்பளவு சுமார் 2,580,000 சதுர கிலோமீட்டராகவும் மற்றும் சராசரியாக வினாடிக்கு 19,600 கன மீட்டர் நீரையும் வௌியேற்றுகின்றது.

காவி மஞ்சள் நிறத்தில் இருக்கும் இந்த ஆற்றின் நீரின் சேற்று நீர் காரணமாக இது மஞ்சள் ஆறு என்று அழைக்கப்படுகிறது,

மேலும் ஆண்டுதோறும், இது சுமார் 1.6 மில்லியன் டன் வண்டல் மண்ணை சுமந்து செல்கின்றது, இது மிகவும் வளமான நதியாகும். சீனாவின் பருத்தி மற்றும் கோதுமை உற்பத்தியில் பெரும் பங்களிப்பையும் வழங்குகின்றது.


06. மஞ்சள் நதி:
சீனாவின் “தாய்நதி” என அழைக்கப்படுகிறது, ஆனால் வெள்ளப்பெருக்குகளால் “சோகம் தரும் நதி” என்றும் அழைக்கப்படுகிறது.

நீளம் (கிமீ): 5,464
வடிகால் பகுதி (கிமீ²): 745,000
சராசரி வெளியேற்றம் (மீ³/வி): 2,110

இது உலகின் 6வது பெரிய நதியாக காணப்படுகின்றது மேலும் இது சீனாவின் 2வது நீளமான நதியாகவும் உள்ளது. இது தோராயமாக 5,464 கிமீ நீளம் மற்றும் 745,000 சதுர கிலோமீட்டர் வடிகால் பரப்பளவு மற்றும் வினாடிக்கு சராசரியாக 2,110 கன மீட்டர் நீர் வெளியேற்றத்தையும் கொண்டது.

சீனாவின் வடமேற்குப் பகுதியில் உள்ள கிங்காய் மாகாணத்தில் காணப்படும் குன்லுன் மலைகளில் இதன் நீர்நிலை அமைந்துள்ளது.

நதியின் மேல் பகுதி கிங்காய் மாகாணத்தில் தொடங்கி ஹெகோஜென் வரை செல்கின்றது. இந்தப் பகுதியில் உள்ள மக்கள் இந்த நதியிலிருந்து பாசனத்திற்காக தண்ணீரைப் பயன்படுத்துகின்றனர். இது போஹாய் கடலில் உள்ள ஒரு டெல்டாவில் முடிகின்றது.


7. ஓப் நதி

நீளம் (கிமீ): 5,410
வடிகால் பகுதி (கிமீ²): 2,990,000
சராசரி வெளியேற்றம் (மீ³/வி): 12,800

இந்த நதி உலகின் 7வது பெரிய ஆறுகளில் ஒன்றாகும். இது தோராயமாக 5,410 கிமீ நீளமும் 2,990,000 கிமீ வடிகால் பரப்பளவையும் கொண்டது, வினாடிக்கு சுமார் 12,800 மீ நீர் வெளியேற்றம் கொண்டது.

இது ஆர்க்டிக் பெருங்கடலில் பாயும் சைபீரிய நதிகளில் ஒன்றாகும். இதன் முக்கிய துணை நதிகளாக அனௌயில், அலே, சாண்டி, கட்டூன், பியா மற்றும் சாரிஷ் ஆகிய நதிகள் காணப்படுகின்றது.


8. பரானா நதி

நீளம் (கிமீ): 4,880
வடிகால் பகுதி (கிமீ²): 2,582,672
சராசரி வெளியேற்றம் (மீ³/வி): 18,000

இது சுமார் 2,582,672 கிமீ2 வடிகால் பரப்பளவையும் 18,000 மீ3 வெளியேற்றத்தையும் கொண்ட மிகப்பெரிய ஆறுகளில் எட்டாவது இடத்தில் உள்ளது. தென் அமெரிக்காவில் காணப்படும் இந் நதி சுமார் 3,030 மைல்கள் நீளத்தைக் கொண்டுள்ளது.

பரானா நதி டூபி மொழியிலிருந்து உருவாகின்றது, மேலும் இது “கடல் போன்றது” என்று பொருள்படும். இது பராகுவே, அர்ஜென்டினா மற்றும் பிரேசில் ஆகிய மூன்று நாடுகள் வழியாக பாய்கின்றது.

தென் அமெரிக்க நதிகளில், இது அமேசான் நதிக்குப் பிறகு இரண்டாவது மிகப் பெரிய நதியாக காணப்படுகின்றது. இது முதலில் பராகுவே நதியுடனும் பின்னர் கீழ்நோக்கி உருகுவே நதியுடனும் இணைந்து ரியோ டி லா பிளாட்டாவை உருவாக்குகின்றது. பின்னர் இந் நதி அட்லாண்டிக் பெருங்கடலில் பாய்கின்றது.


09. காங்கோ நதி

நீளம் (கிமீ): 4,700
வடிகால் பரப்பளவு (கிமீ²): 3,680,000
சராசரி வெளியேற்றம் (மீ³/வி): 41,800

உலகின் மிகப்பெரிய ஆறுகளில் 9வது இடத்தில் காங்கோ நதி காணப்படுகின்றது. இது பூமியில் தோராயமாக 230 மீ ஆழம் கொண்ட மிக ஆழமான நதியாகும்.

மேலும் இது முன்னர் ஜைர் நதி என்று அழைக்கப்பட்டது. இது சுமார் 4,700 கிமீ நீளம் கொண்டது. இதன் வடிகால் படுகை தோராயமாக 3,680,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது.

மேலும் அதன் வடிகால் படுகையின் அளவின் அடிப்படையில், இது பூமியில் ஒன்பதாவது நீளமான நதியாகும். இந்த நதி பெரிய மழைக்காடுகள் வழியாக பாய்கின்ற உலகின் இரண்டாவது மிகப் பெரிய நதியாகவும் காணப்படுகின்றது.


10. அமுர் நதி

நீளம் (கிமீ): 4,444
வடிகால் பகுதி (கிமீ²): 1,855,000
சராசரி வெளியேற்றம் (மீ³/வி): 11,400

அமுர் நதி உலகின் மிகப்பெரிய ஆறுகளில் பத்தாவது இடத்தில் உள்ளது மற்றும் ரஷ்ய கூட்டமைப்பில் மிகவும் முக்கியமான நதியாகவும் காணப்படுகின்றது.

ரஷ்யா மற்றும் சீனாவின் எல்லையில் காணப்படுகின்ற இந் நதியானது தோராயமாக 4,444 கிமீ நீளம் கொண்டது. அமுரில் 200 துணை நதிகள் உள்ளன.

இதில் புரேயா, ஜீயா, ஆம்கென் மற்றும் ஷில்கா, எர்குனே, ஹுமா, சோங்குவா மற்றும் உசுரி ஆகியவை முக்கியமான துணை நதிகளாக காணப்படுகின்றது.

இது ஏராளமான பறவைகள், குறிப்பாக ஓரியண்டல் ஒயிட் ஸ்டாக்ஸ் மற்றும் மீன்பிடி படகுகளை கவிழ்த்து மீனவர்களை மூழ்கடிக்கும் கலுகா ஸ்டர்ஜன் ஆகியவற்றின் தாயகமாகும். இந்த நதியில் 120 க்கும் மேற்பட்ட மீன் இனங்களும் உள்ளன.


தகவல் : sarinigar.com

Leave a Reply

error: Content is protected by SARINIGAR.com!!