தெரியாத நம்பர் ஒன்றிலிருந்து அழைப்பு வந்தால் என்ன செய்வது?

Mobile, அழைப்புநண்பர்கள் பொழுது போக்கிற்காக, காதலிக்க பெண்கள் தேடும் அண்ணன்மார்கள் மட்டுமன்றி திருமணம் முடித்து அறுபது தாண்டிய அங்கள்மாறும் சித்து விளையாட்டை ஆரம்பிக்க அறியாத நம்பர்களுக்கு அழைப்பு விடுத்து பார்பார்கள்.

அது மட்டுமன்றி பெண்கள் ரீலோட் பண்னுவதற்கு தனது நம்பரை ரீலோட் கடைக்கு கொடுத்து விட்டு வந்த பின் இரண்டு, மூன்று நாட்களில் அறியா நம்பர்களில் இருந்து அழைப்புகள் வரத் தொடங்கும்.

இப்படி நமக்கு வரும் தெரியாத அழைப்புகளை எப்படி சமாளிப்பது என்பதை பற்றி இங்கு நாம் பார்ப்போம்.

1. வீட்டில் உள்ள ஆண்கள் யாரிடமாவது போனை கொடுங்கள்

இப்படி ஒரு அழைப்பு வந்தால் பெரும்பாலும் அழைப்பை எடுத்தவர்கள் மறுமுனையில் பேசுபவர் ஒரு பெண்னா என்று அறிந்து கொள்வதற்காக சற்று நேரம் பேசாமல் காத்திருப்பார்கள்.

தவறுதலாகவேனும் அழகான மெல்லிய குரலில் ஹலோ சொன்னால் போதும் அதிலிருந்து தப்பிக்க போராட வேண்டியிருக்கும்.

இவ்வாறானா தொந்தரவு அழைப்புகள் வந்தால் “ஏன் பெண்களுக்கு போன் ஆன்சர் பண்ணக் கூட முடியாத, அதிலென்ன தப்பு” என்று சமூகத்தை திருத்த முற்படுவதை பக்கத்தில் போட்டு விட்டு வீட்டிலிருக்கும் அப்பா, அண்ணன் போன்ற யாரிடமாவது போனை கொடுப்பது உங்களுக்கு நல்லது.

2. பேசும் நபரை யூகிக்க முற்பட வேண்டாம்

தொலைபேசி அழைப்புகளில் இருக்க வேண்டிய நல்ல தார்மீக குணங்களில் ஒன்று தான் அழைப்பை செய்பவர் முதலில் அவர்கள் யார் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வது.

அப்படியில்லாமல், “முடிந்தால் நான் யார் என்று கூறுங்கள் பார்ப்போம்?” என ஏதோ போனில் அழைப்பு எடுப்பவரின் முகம் தெரிகின்றது போல் முட்டாள் தனமான கேள்வியை கேட்டால் அதற்கு பயமின்றி நச்சின்று இரு வார்தைகளை கேட்டு விடுவது தப்பில்லை.

தெரிந்த யாராவதோ தெரியாது என்று ஒவ்வொரு பெயராக சொல்ல ஆரம்பித்தால் போதும் “ஆ? அது யாரு?” என்று அவர்கள் தமது வலையில் சிக்க வைப்பார்கள். அதனால் அழைப்பை எடுத்தவர் அது யாராக இருந்தாலும் தான் யார் என்று சொல்லா விட்டால் உடனே அழைப்பை துண்டித்து விடுங்கள்.

3. அவர்கள் யார் என்று கூறும் வரை உங்களின் விபரங்களை சொல்ல முற்பட வேண்டாம்.

பேசுபவர் உங்களுக்குத் தெரிந்தவரா என்பது உங்களுக்கு உறுதியாகும் வரை உங்கள் விவரங்களைக் கொடுக்காமல் இருக்க முயற்சி செய்யுங்கள்.

நீங்கள் எங்கிருந்து பேசுகிறீர்கள், வீட்டில் எத்தனை பேர் இருக்கிறார்கள், நீங்கள் என்ன செய்கிறீர்கள் (நான் என்ன செய்தால் உனக்கென்ன?) போன்ற விசித்திரமான விஷயங்களைப் பேச ஆரம்பித்தால் தொலைபேசியை துண்டித்து விடுங்கள்.

இந்த நேரத்தில் இருப்பது ஒபீஸில், வீட்டில் யாருமில்லை போண்ற சிறு விபரங்கள் கூட கசிந்தாலும் குறிப்பிட்ட நேரத்தை டார்கட் பண்னி அழைப்பு விடுப்பார்கள். அதன் பின் கழன்று விடுவதென்பது முடியாத விடயமாகி விடும்.

“அழைப்பை எடுத்தது நீங்கள். எனவே, “முதலில் நீங்கள் யார் என்று கூறுங்கள்?” என்று கேட்க உங்களுக்கு உரிமை உண்டு.

4. தெரியாத மிஸ்டு கால்களுக்கு மீண்டும் அழைப்பை எடுக்காதீர்கள்.

பலருக்கு சித்து கனவுகள் பல இருந்தாலும் ஒரு போன் செய்ய கூட பணம் இருக்காது. அதனால்தான் தெரியாத நம்பருக்கு மிஸ்டு கால் செய்து விட்டு, மீண்டும் ரிடன் அழைப்பு வரும்போது தமது சித்து விளையாட்டை ஆரம்பிப்பார்கள்.

எனவே, உங்கள் பணத்தை செலவழித்துக் கொண்டு யாருடைய வலையிலும் சிக்காமல், தெரியாத எண்ணிலிருந்து உங்களுக்கு மிஸ்டு கால் வந்தால், அதை அலட்சியமாக விட்டு விடுங்கள், அட பெரும் தொந்தரவாக இருந்தால் பிளொக் பண்ணி விடுங்கள்.

அதை விடுத்து நாம் மறுபடி அழைப்பை எடுத்து அல்லது, நீங்கள் யார்? who are you? என்று மசேஜ் பண்னினால் தீயை மூட்டுவதற்கான வாய்ப்பை நாமே உருவாக்கி கொடுத்தது போல் ஆகிவிடும்.

5. இலக்கத்தைப் பார்த்து நிறுவனமா என்று யூகித்துக் கொள்ளலாம்

பல நிறுவனங்கள் வாடிக்கையாளர் சேவைகளுக்கு லேண்ட்லைன் எண்களை வழங்குகின்றன. மேலும், அவர்கள் ஒரே மாதிரியான எண்களின் வரிசையைக் கொண்ட அல்லது vip எண்களாக இருக்கும்.

ரேண்டம் எண்களைக் கொண்ட மொபைல் எண்களிலிருந்து இதுபோன்ற முக்கியமான நிறுவன வேலைகளுக்கு அழைப்பது பெரும்பாலும் குறைவு என்றே சொல்லலாம்.

அப்படி அழைப்புகள் வந்தாலும் மிகவும் கண்னியமான முறையில் தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டு அழைப்பை எடுத்ததற்கான காரணத்தையும் கூறி எமது விபரங்களையும் அவர்களே கூறிய பின் தான், அவர்கள் எமது விபரங்களை கேட்பார்கள்.

இதனால் குறிப்பிட்ட இலக்கத்தின் மூலம், பேசுபவரின் தொனி, பேச்சின் கண்ணிய தண்மை போன்றவற்றின் மூலம் குறிப்பிட்ட அழைப்பு ஒரு நிறுவனத்தினுடையதா அல்லது சில்லறை பொறுக்கியா என அறிந்து கொள்ளலாம்.

6. தனிப்பட்ட ரகசிய தகவல்களை கொடுப்பதைத் தவிர்க்கவும்

சந்தேகத்திற்கிடமான, தாருமாறான இலக்கமொன்றிலிருந்து அழைப்பு வந்து “நாங்கள் குறிப்பிட்ட நிறுவனத்தால்” எனக் கூறி உங்கள் வங்கி விவரங்கள், கிரெடிட்/டெபிட் கார்டு விவரங்களைக் கேட்டால், அவற்றைக் கொடுக்காமல் இருக்க உங்களுக்கு உரிமை உண்டு.

அடையாள அட்டை எண் மற்றும் வாகன எண்ணை கொடுத்தால் எமது ஏனைய தனிப்பட்ட விபரங்களைக் காட்டும் செயழிகள் (Apps) இருப்பதால் அவ்வாறான விபரங்களையும் தெரியாத நபர்களுக்கு வழங்காமல் விடுவது நல்லது.

எனவே இவ்வாறான முறைகளில் இது பதிலளிக்க வேண்டிய அழைப்பா இல்லையா என்பதை அறிந்து போன் ஆன்சர் பண்ணினால் உங்களுக்கு கீழ் தரமான வேலைகளை செய்யும் பொறுக்கிகளிடமிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

– ரீஸாஹ் ஜெஸ்மின்
– சரிநிகர்.com –


Leave a Reply

error: Content is protected !!