கிரேக்கம், ரோம் முதல் இந்தியா, சீனா வரை உலகின் பிற பகுதிகள் பெண்களை எந்த உரிமையும் இல்லாமல், குழந்தைகளை விடவோ அல்லது அடிமைகளை விடவோ சிறந்தவர்கள் அல்ல என்று கருதிய நேரத்தில், இஸ்லாம் ஆண்களுடன் பெணின் சமத்துவத்தை பல விஷயங்களில் அங்கீகரித்தது.
திருக்குர்ஆன் கூறுகிறது:
இன்னும், நீங்கள் அவர்களிடம் ஆறுதல் பெறுதற்குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக்கிடையே அன்பையும், ரஹ்மத்தையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்; சிந்தித்து உணரக்கூடியவர்களுக்கு நிச்சயமாக, இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன.
[திருக்குர்ஆன் 30:21]
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“ஈமான் கொண்டவர்களில் மிகச் சிறந்தவர், தம் மனைவியிடம் அன்பாக நடந்து கொள்பவரே” (என்று நபியே!) நீர் கூறுவீராக. [அபூதாவூத்]
ஆதாமும் ஹவ்வாவும் தாம் செய்த பாவத்திற்கு சமமாகக் குற்றவாளிகளாகவும், கிருபையை இழந்தவர்களாகவும் இருந்தார்கள்; அல்லாஹ் அவ்விருவரையும் மன்னித்தான்.
இஸ்லாத்தில் பல பெண்களுக்கு உயர்ந்த அந்தஸ்து உண்டு; இஸ்லாத்திற்கு மாறிய முதல் நபர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் மனைவி கதீஜா (ரழி) அவர்களாவர், நபியவர்கள் அவர்களை நேசித்தார் மற்றும் மதித்தார் என்ற உண்மையைக் கவனியுங்கள்.
கதீஜா (ரழி) அவர்களின் மரணத்திற்குப் பிறகு அவரது அபிமான மனைவி ஆயிஷா (ரழி) அவர்கள் ஒரு அறிஞராகவும், ஹதீஸ் இலக்கியத்தின் சிறந்த ஆதாரங்களில் ஒருவராகவும் புகழ் பெற்றார்.
பெண் ஸஹாபாக்களில் பலர் மகத்தான செயல்களைச் செய்து புகழ் பெற்றனர்,
மேலும் இஸ்லாமிய வரலாறு முழுவதிலும் புகழ்பெற்ற மற்றும் செல்வாக்குமிக்க பெண் அறிஞர்கள் மற்றும் சட்ட வல்லுநர்கள் உள்ளனர். இஸ்லாத்தில் பெண்களின் பங்கு மிகவும் வரவேற்கப்பட்டதாக காணப்படுகின்றது.
மேற்கத்திய நாடுகளில் பலர் பெண்களை நடத்துவது தொடர்பாக இஸ்லாத்தை விமர்சித்தாலும், உண்மையில் பல முஸ்லிம் நாடுகளில் பெண் ஆட்சியாளர்களும் ஜனாதிபதிகளும் உள்ளனர் என்பதையும் நாம் குறிப்பிடலாம்.
கல்வியைப் பொறுத்தவரை, பெண்களுக்கும் ஆண்களுக்கும் ஒரே மாதிரியான உரிமைகளும் கடமைகளும் உள்ளன. இது நபிகள் நாயகத்தின் கூற்றில் தெளிவாகிறது:
“ஒவ்வொரு இறை நம்பிக்கையாளருக்கும் கல்வி அறிவை தேடுவது கட்டாயமாகும்.” [இப்னுமாஜா] இது ஆண்களையும் பெண்களையும் குறிக்கிறது.
ஒரு பென் தனக்கு இறைவன் வழங்கியுள்ளபடி நடத்தப்பட வேண்டும், ஒரு தனிநபராக கருதப்பட வேண்டும், தனது சொந்த சொத்து மற்றும் சம்பாத்தியத்தை சொந்தமாக வைத்திருக்கவும் விற்கவும் உரிமை உள்ளது,
திருமணத்திற்குப் பிறகும் ஒப்பந்தங்களில் கையெழுத்திட வேண்டும். அவள் விரும்பினால் கல்வி கற்கவும், வீட்டிற்கு வெளியே வேலை செய்யவும் உரிமை உண்டு.
தந்தை, தாய், கணவர் ஆகியோரிடமிருந்து வாரிசுரிமை பெற அவளுக்கு உரிமை உண்டு. இதில் கவனிக்க வேண்டிய ஒரு சுவாரசியமான விஷயம் என்னவெனில், மற்ற மதங்களைப் போலல்லாமல், இஸ்லாத்தில் ஒரு பென் ஒரு குழுவிற்கு ஒரு இமாமாக, தலைவியாக இருக்க முடியும்.
ஒரு முஸ்லிம் பென்ணுக்கும் கடமைகள் உண்டு. தொழுகை, நோன்பு, ஸக்காத், ஹஜ், நற்செயல்கள் செய்தல் போன்ற சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகள் அனைத்தும் பென்களுக்குப் பொருந்தும், இருப்பினும் முக்கியமாக பென் உடலியலுடன் தொடர்புடைய சிறிய வேறுபாடுகள் இருக்கின்றன.
திருமணத்திற்கு முன், கணவனை தேர்வு செய்யும் உரிமை பென்ணுக்கு உண்டு. திருமணத்திற்கு பென்ணின் சம்மதம் அவசியம் குறித்து இஸ்லாமிய சட்டம் மிகவும் கண்டிப்பானது.
மணமகன் மணமகளுக்கு திருமண வரதட்சணை கொடுக்கிறார். கணவனின் பெயரை எடுக்காமல், தன் குடும்பப் பெயரையே வைத்துக் கொள்கிறாள்.
ஒரு பென் ஏற்கனவே பணக்காரராக இருந்தாலும் தனது கணவரால் ஆதரிக்கப்பட உரிமை உண்டு.
விவாகரத்து கோருவதற்கும், சிறு குழந்தைகளை பராமரிப்பதற்கும் அவளுக்கு உரிமை உண்டு. ஒரு சில அசாதாரண சூழ்நிலைகளைத் தவிர, அவள் வரதட்சணையைத் திருப்பிக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை.
பல இடங்களிலும், காலங்களிலும் முஸ்லிம் சமூகங்கள் எப்போதும் நடைமுறையில் மேற்கூறிய அனைத்தையும் அல்லது பலவற்றையும் கடைப்பிடிக்கவில்லை என்ற உண்மை இருந்தபோதிலும், இந்த நிலைப்பாடு 1,400 ஆண்டுகளாக உள்ளது,
அதே நேரத்தில் கிட்டத்தட்ட அனைத்து முக்கிய நாகரிகங்களும் 19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டுகள் வரை இந்த பிரச்சினைகளை நிவர்த்தி செய்யவோ அல்லது தங்கள் எதிர்மறை அணுகுமுறைகளை மாற்றவோ தொடங்கவில்லை.
இன்னும் பல சமகால நாகரிகங்கள் உள்ளன, அவை இன்னும் அவ்வாறு செய்யவுமில்லை.