தொழில் மற்றும் வியாபாரத்தில் தடுக்கப்பட்டவை

 தொழில் மற்றும் வியாபாரத்தில் தடுக்கப்பட்டவை

வட்டி வாங்குவது.

ஏமாற்றுவது, மோசடி செய்வது.

இறைச்சிக்குப் பகரமாக ஆட்டை விற்பனை செய்வது.

(நதி, ஓடைகளில் வரும்) அதிகப்படியான தண்ணீரை விற்பது.

நாய், பூனை, இரத்தம், மது, பன்றி, சிலைகள், ஆண் மிருகத்தின் இந்திரியம் இவற்றை விற்பது வாங்குவது.

நாயை விற்று அதன் கிரயத்தை சாப்பிடுவது.

அல்லாஹ் ஹராமாக்கிய விற்பது, வாங்குவது. பொருள்களை வாங்கும் எண்ணமின்றி பொருள்களின் விலையை உயர்த்துவது.

வியாபாரப் பொருள்களின் குறைகளை மறைப்பது.

வியாபாரப் பொருளின் குறைகளை மறைத்து விற்பது.

ஜுமுஆ நாளன்று (இரண்டாவது) அதானிற்குப் பின் வியாபாரம் செய்வது.

தனக்கு சொந்தமில்லாததை விற்பது

வாங்கிய பொருள் கைக்கு வருவதற்கு முன் விற்பனை செய்வது.

தங்கத்தைதங்கத்திற்குப்பகரமாக, வெள்ளியை வெள்ளிக்குப் பகரமாக விற்கும் போது ஏற்றத் தாழ்வுடன் விற்பது. (ஆனால் ஒன்றுக்கொன்று சமமாகவும், ரொக்கமாகவும் இருந்தால் விற்பது கூடும்).

ஒருவர் ஒரு பொருளை ஒருவரிடம் விற்பனை செய்து கொண்டிருக்கும்போது மற்றவர் குறிக்கிட்டு அவரிடம் தம் பொருளை விற்பது.

ஒருவர் ஒரு பொருள் வாங்கிக் கொண்டிருக்கும் போது மற்றவர் குறிக்கிட்டு அதை வாங்குவது.

பழங்களை அது பூவாக இருக்கும் போதும், பறிப்பதற்கு முன்னரும் விற்பனை செய்வது.

குறையுள்ள பொருளின் குறையை மறைத்து விற்பது.

நிறுப்பதில், அளப்பதில் குறை செய்வது.

வியாபாரப் பொருள்களை பதுக்குவது.

வியாபாரிகள் ஊருக்குள் வருவதற்கு முன் ஊருக்கு வெளியில் சென்று வியாபாரம் பேசுவது.

நகரத்தில் உள்ளவர் கிராமவாசிக்கு விற்றுக் கொடுப்பது. (அதாவது, கிராமவாசியின் பொருளை விற்பதற்கு இடைத் தரகராக செயல் படுவது. அவரது பொருளை தானாக விற்பனை வேண்டும்.) செய்வதற்கு விட்டுவிட

» குர்பானி கொடுத்துவிட்டு அதன் தோலை விற்று, குர்பானி கொடுத்தவர் பயன்பெறுவது.

வீடு, தோட்டம் போன்றவற்றில் பங்காளியாக இருப்பவர், தனது பங்கை வாங்க சக்தியுள்ள மற்ற பங்காளியிடம் விற்காமல் பிறரிடம் விற்பது.

திருகுர்ஆனை ஓதிக்காண்பித்து அதன் மூலம் சம்பாதிப்பது. (திருக்குர்ஆனை ஓத, அதற்காக கிரயம் கேட்பது)

எத்தீம்களின் (அநாதைகளின்) பொருளை தவறான முறையில் அனுபவிப்பது.

சூதாடுவது.

அபகரிப்பது.

லஞ்சம் வாங்குவது, லஞ்சம் கொடுப்பது.

திருடுவது.

கொள்ளையடிப்பது.

வெற்றி (கனீமத்து)ப் பொருளை பங்கிடுவ தற்கு முன்பே அதிலிருந்து அனுமதியின்றி எடுத்துக் கொள்வது.

அநியாயமான முறையில் மக்கள் சொத்துக் களை அனுபவிப்பது.

மக்களின் சொத்துக்களை வீணடிப்பது.

திரும்பக் கொடுக்கும் எண்ணமின்றி கடன் வாங்குவது.

► மக்களுக்கு கொடுக்க வேண்டிய பொருளை குறைத்துக் கொடுப்பது.

கண்டெடுக்கப்பட்ட பொருளை மறைப்பது, மறைக்க முயற்சிப்பது.

கீழே கிடக்கும் பொருளை எடுப்பது.

மோசடி,

ஏமாற்றுதல் அனைத்து வழிகளும்.

ஆகியவற்றின்

பிறர் பொருளை பயன்படுத்துவது. அனுமதியின்றி

பிறரை வருத்தி அவரது பொருளை பெறுவது.

சிபாரிசு செய்ததற்காக அன்பளிப்பு பெறுவது.

மார்க்கத்தை மறந்து (மார்க்க சட்டங்களை அலட்சியம் செய்து) உலகப் பொருளை சம்பாதிக்கப் பாடுபடுவது.

(جَزَاكَ ٱللَّٰهُ خَيْرًا)

Leave a Reply