
தெலுங்கானாவில் பேருந்து மீது டிப்பர் வாகனம் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் மூன்று சகோதரிகள் உயிரிழந்துள்ளனர்.
ரங்கா ரெட்டி மாவட்டத்தில் கற்கள் ஏற்றிவந்த டிப்பர், பேருந்து மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 20 பேர் உயிரிழந்த நிலையில் பலரும் காயமடைந்தனர்.
குறித்த விபத்தில் மூத்த சகோதரியின் திருமணத்திற்கு சென்று ஊர் திரும்பி கொண்டு இருந்த மூன்று இளைய சகோதரிகளும் உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் சிக்கி பலியான மூன்று சகோதரிகளின் உடலங்களும் சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW
