பாணந்துறையில் விகாராதிபதிக்கு சொந்தமான வங்கிக் கணக்கில் இருந்து 2 கோடி பணத்தை மோசடியாக எடுத்த சம்பவம் தொடர்பாக 4 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தனியார் வங்கியில் தனது வங்கிக் கணக்கைப் பராமரித்த நிலையில், அவரது அடையாள அட்டை காணாமல் போயுள்ளது.
சந்தேக நபர்கள் பல சந்தர்ப்பங்களில் அதே வங்கியின் மற்றொரு வங்கிக் கிளையில் உள்ள தங்கள் சொந்தக் கணக்குகளுக்கு விகாராதிபதியின் வங்கி கணக்கில் இருந்து பணத்தை மாற்றி, பின்னர் பணத்தை எடுத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். விகாராதிபதி அளித்த முறைப்பாட்டை கம்பஹா, ஜா-எல, மினுவாங்கொடை, ஏகல ஆகிய இடங்களில் வசிக்கும் நால்வரே இவ்வாறு கைதாகியுள்ளனர்.