அத்தியாவசிய சேவைகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்

இலங்கையில் பல முக்கியமான துறைகளை அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தி ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மின்சாரம், எரிபொருள், சுகாதார சேவைகள், போக்குவரத்து, வீதிகள், நீர் வழங்கல் மற்றும் உணவுப் பொருட்கள் விநியோகம் ஆகியன அத்தியாவசிய சேவைகளாகத் தொடர்ந்து முன்னெடுக்கப்படவுள்ளன.

மேலும், மாவட்டச் செயலகங்கள், பிரதேச செயலகங்கள், கள உத்தியோகத்தர்கள்,அம்பியூலன்ஸ் சேவைகள், மத்திய வங்கி, அரச வங்கிகள் மற்றும் காப்புறுதிச் சேவைகளும் இந்த வர்த்தமானியின் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ளன.

நன்றி

Leave a Reply