வடக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்  வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக இடமாற்றம் வழங்ககோரி தொழிற்சங்க போராட்டத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை ஈடுபட்டனர்.
கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களில் பணியாற்றுகின்ற யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வெளி மாவட்ட சேவை காலத்தை நிறைவு செய்து பல ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், சரியான பொறிமுறையின் கீழ் இதுவரை இடமாற்றம் வழங்கப்படவில்லை என தெரிவித்து இந்த போராட்டத்தை மேற்கொண்டனர்.  அதனை தொடர்ந்து வடக்கு மாகாண ஆளுநரை மூவர் அடங்கிய குழுவினர் சந்தித்து தமது பிரச்சனைகளை தெரியப்படுத்தினர்.
தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் யாழ். மாவட்ட செயலரை சந்தித்து கலந்துரையாடியதோடு மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.



The post அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம் appeared first on Global Tamil News.
