72
அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் விடுத்த இராணுவ தொடர்பான கோரிக்கைகளை நிராகரிப்பதன் மூலம், இலங்கை தனது வெளியுறவுக் கொள்கையில் நடுநிலைமையைப் பேணிவருவதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இன்று (20) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இதுகுறித்து மேலும் விளக்கமளித்த அவர்,
“ஈரானுக்குச் சொந்தமான மூன்று போர்க்கப்பல்கள் நல்லெண்ண விஜயமாக இலங்கைக்கு வர அனுமதி கோரியிருந்தன. அதேவேளை, அமெரிக்கா தனது இரண்டு போர் விமானங்களை மத்தள விமான நிலையத்தில் தரையிறக்க அனுமதி கோரியது. சர்வதேச விவகாரங்களில் எவ்வித பக்கச்சார்புமின்றி நடுநிலைமையைப் பேணுவதற்காக, அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளின் கோரிக்கைகளையும் இலங்கை அரசு நிராகரித்துள்ளது. இதன் மூலம் எமது நடுநிலைத் தன்மையை பாதுகாத்துள்ளோம்,” என அவர் தெரிவித்தார்.
#AnuraKumara #SLNeutrality #ForeignPolicy #US_IranConflict #MattalaAirport
