Population Research Centre Recruitment 2025: மக்கள்தொகை ஆராய்ச்சி மையத்தில் (Population Research Centre) காலியாக உள்ள 06 Lower Division Clerk/Typist, Assistant Professor, Research Investigator, Field Investigator, Research Fellow – II பணியிடங்களை நிரப்ப அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 25.11.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யார் விண்ணப்பிக்கலாம்? கல்வித் தகுதி என்ன? வயது வரம்பு எவ்வளவு? விண்ணப்பிப்பது எப்படி? என்பதற்கான முழு விவரங்களையும் இங்கு பார்க்கலாம்.
Population Research Centre Recruitment 2025
| Description | Details |
| வேலை பிரிவு | Central Govt Jobs 2025 மத்திய அரசு வேலை 2025 |
| துறைகள் | Population Research Centre மக்கள்தொகை ஆராய்ச்சி மையம் |
| காலியிடங்கள் | 06 |
| பணிகள் | Lower Division Clerk/Typist, Assistant Professor,Research Investigator, Field Investigator,Research Fellow – II |
| விண்ணப்பிக்கும் முறை | தபால் மூலம் |
| கடைசி தேதி | 25.11.2025 |
| பணியிடம் | இந்தியா |
| அதிகாரப்பூர்வ இணையதளம் |
https://mohfw.gov.in/ |
Population Research Centre Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
மக்கள்தொகை ஆராய்ச்சி மையம் வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
| பதவி (Post) | காலியிடங்கள் (Vacancies) |
| Lower Division Clerk/Typist | 01 |
| Assistant Professor | 01 |
| Research Investigator | 01 |
| Field Investigator | 02 |
| Research Fellow – II | 01 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Population Research Centre Recruitment 2025 கல்வித் தகுதி
மக்கள்தொகை ஆராய்ச்சி மையம் ஆட்சேர்ப்பு 2025-க்கான கல்வித் தகுதி விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
| பதவி (Post) | கல்வித் தகுதி (Educational Qualification) |
| Lower Division Clerk/Typist | அங்கீகாரம் பெற்ற இந்தியப் பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் (Any Degree) பெற்றிருக்க வேண்டும். |
| Assistant Professor | சமீபத்திய UGC வழிகாட்டுதலின்படி தகுதிகள். மற்றும் மக்கள் தொகை படிப்பு / புள்ளியியல் / பொருளாதாரம் / சமூகவியல் / சமூகப் பணி / உளவியல் / புவியியல் போன்ற தொடர்புடைய துறைகளில் முதுகலை பட்டம். (மக்கள் தொகை படிப்பைத் தவிர பிற துறைகளில் முதுகலை பட்டம் பெற்றிருந்தால், அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் மக்கள் தொகை படிப்பில் குறைந்தபட்சம் ஒரு வருட முழு நேரப் படிப்பை முடித்திருக்க வேண்டும்). |
| Research Investigator | மக்கள் தொகை படிப்பு / புள்ளியியல் / சமூகப் பணி / உளவியல் / பொருளாதாரம் / சமூகவியல் போன்ற தொடர்புடைய துறைகளில் குறைந்தபட்சம் இரண்டாம் வகுப்பு முதுகலை பட்டம். கணினி பயன்பாடுகளில் அறிவு தேவை. |
| Field Investigator | மக்கள் தொகை படிப்பு / புள்ளியியல் / பொருளாதாரம் / சமூகவியல் / உளவியல் / புவியியல் போன்ற தொடர்புடைய துறைகளில் குறைந்தபட்சம் இரண்டாம் வகுப்பு முதுகலை பட்டம். |
| Research Fellow – II | அங்கீகாரம் பெற்ற இந்தியப் பல்கலைக்கழகத்தில் மக்கள் தொகை படிப்பு / புள்ளியியல் / பொருளாதாரம் / கணிதம் / சமூகவியல் போன்ற தொடர்புடைய துறைகளில் குறைந்தபட்சம் இரண்டாம் வகுப்பு முதுகலை பட்டம். |
PRC Recruitment 2025 வயது வரம்பு விவரங்கள்
மக்கள்தொகை ஆராய்ச்சி மையம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 42 வயதுக்குள் இருக்க வேண்டும்.
வயது வரம்பு தளர்வு (Age Relaxation)
- SC/ ST: 5 ஆண்டுகள்
- OBC: 3 ஆண்டுகள்
- PwBD (Gen/ EWS): 10 ஆண்டுகள்
- PwBD (SC/ ST): 15 ஆண்டுகள்
- PwBD (OBC): 13 ஆண்டுகள்
PRC Recruitment 2025 சம்பளம் விவரங்கள்
மக்கள்தொகை ஆராய்ச்சி மையம் ஆட்சேர்ப்பு 2025-க்கான கல்வித் தகுதி விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
| பதவி (Post) | சம்பளம் (Pay Scale) |
| Lower Division Clerk/Typist | Rs.37,747/- |
| Assistant Professor | Rs.57,700 – 1,82,400/- |
| Research Investigator | Rs.44,570 – 1,27,480/- |
| Field Investigator | Rs.32,670 – 1,01,970/- |
| Research Fellow – II | Rs.25,000/- |
Population Research Centre Recruitment 2025 தேர்வு செயல்முறை
மக்கள்தொகை ஆராய்ச்சி மையத்தின் (Population Research Centre – PRC) 2025 வேலைவாய்ப்புக்கான தேர்வு செயல்முறை இரண்டு முக்கிய கட்டங்களாக அமையும்.
முதலில், விண்ணப்பிக்கும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அவர்களின் கல்வித் தகுதி மற்றும் பிற விவரங்களின் அடிப்படையில் குறுகிய பட்டியல் (Short Listing) செய்யப்படுவார்கள். குறுகிய பட்டியலில் இடம்பெறும் விண்ணப்பதாரர்கள் அடுத்த கட்டத்திற்குத் தகுதி பெறுவார்கள். இரண்டாவதாக, குறுகிய பட்டியல் செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள், விண்ணப்பித்த பதவிக்கு ஏற்ப, கணினி திறன் தேர்வு (Computer Proficiency Test) அல்லது நேர்காணல் (Interview) ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
Population Research Centre Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
- விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 25.10.2025
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.11.2025
Population Research Centre Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
மக்கள்தொகை ஆராய்ச்சி மையம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உடைய விண்ணப்பதாரர்கள், விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
- படிவம் பதிவிறக்கம்: தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்பப் படிவத்தினை https://mohfw.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலமும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
- பூர்த்தி செய்தல்: பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை (Application Form) கவனமாகப் பூர்த்தி செய்யவும்.
- விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை உரிய ஆவணங்களுடன் இணைத்து, பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்: The Registrar, Central Administrative Office, Andhra University, Visakhapatnam – 530003.
மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
முக்கிய குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்னர், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் (Official Notification) குறிப்பிடப்பட்டிருக்கும் அனைத்து தகுதிகளும் உங்களிடம் இருக்கிறதா என்பதை ஒருமுறைக்கு இருமுறை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
| விண்ணப்ப படிவம் | Click Here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |



