அர்ச்சுனா எம்.பியுடன் செல்ஃபி எடுக்க முண்டியடித்த அரச ஊழியர்கள்

காரைநகர் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுடன் செல்ஃபி எடுக்க முண்டியடித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நேற்று (30) காரைநகர் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது. குறித்த கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவும் கலந்துகொண்டிருந்தார்.

கூட்டம் நடைபெற்றுக்கொண்டு இருந்தவேளை பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் கருத்துக்களுக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், இடையிடையே கைதட்டி ஆரவாரம் செய்த சம்பவம் இடம்பெற்றது.

கூட்டம் முடிவடைந்த பின்னர் சில உத்தியோகத்தர்கள் முண்டியடித்தவாறு அர்ச்சுனாவுடன் செல்ஃபி மற்றும் புகைப்படங்கள் எடுத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நன்றி

Leave a Reply