ஆசியக் கிண்ண கிரிக்கெட் இறுதி போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள்!

முதன்முறையாக ஆசியக் கிண்ண கிரிக்கெட் இறுதி போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் நிலையில் சம்பியன் பட்டத்தை எந்த அணி வெல்லும் என எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

ஆசியக் கிண்ண வரலாற்றிலேயே இறுதி போட்டியில் இந்தியாவும்-பாகிஸ்தானும் மோதுவது இதுவே முதன்முறை.

பஹல்காம் தீவிரவாத தாக்குதல் பின்னணியில் நடைபெறும் இப்போட்டியில் பல்வேறு விரும்பத்தகாத சம்பவங்களும் நடைபெற்றன.

இந்நிலையில் இன்று டுபாய் சா்வதேச மைதானத்தில் இறுதி போட்டி நடைபெற உள்ளதுடன்
இந்த போட்டி தொடர்பில் பாக்கிஸ்தான் அணி தலைவர் கருத்து தெரிவித்துள்ளார்.

இதில், இறுதிப்போட்டியில் இந்தியாவுடன் மோத இருக்கிறோம், மிகவும் உற்சாகமாக இருக்கிறது , நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று தங்களுக்குத் தெரியும் எனவும் யாரையும் வெல்லும் அளவுக்கு தமது அணி நல்ல அணி எனவும் இறுதிப்போட்டியில் இந்தியாவை வெல்ல தாம் முயற்சிப்போம் எனவும் இந்தியா உட்பட எந்த அணியையும் வெல்லும் குணம் தமது அணிக்கு உள்ளது எனவும் இந்தியாவை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply