இந்தியாவையும், ரஷ்யாவையும் மோசமான சீனாவிடம் இழந்துவிட்டோம்: ட்ரம்ப் விரக்தி | Trump says we lost India and russia to evil china

வாஷிங்​டன்: “இந்​தி​யா​வை​யும், ரஷ்​யா​வை​யும் மோச​மான சீனா​விடம் நாம் இழந்​து​விட்​டது போல் தெரி​கிறது. அந்த நாடு​கள் எதிர்காலத்​தில் வளமாக இருக்​கட்​டும்” என சமூக ஊடகத்​தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது விரக்தி கருத்தை தெரி​வித்​துள்​ளார். ரஷ்​யா​விடம் இருந்து இந்​தியா கச்சா எண்​ணெய் வாங்​கு​வ​தால், இந்​தி​யா​வின் மீது அமெரிக்கா 50 சதவீத இறக்​குமதி வரி விதித்​தது. இதனால் இந்​தியா – அமெரிக்க உறவில் விரிசல் ஏற்​பட்​டது.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பிரதமர் மோடி​யிடம் இது தொடர்​பாக பேச பல முறை முயன்​ற​தாக​வும், ஆனால், பிரதமர் மோடி பதில் அளிக்​க​வில்லை எனவும் தகவல்​கள் வெளி​யாகி​யுள்​ளன. இந்​நிலை​யில் ஷாங்​காய் ஒத்​துழைப்பு (எஸ்​சிஓ) மாநாட்​டில் இந்​திய பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்​பிங், ரஷ்ய அதிபர் புதின் ஆகியோர் நெருக்​க​மாக உரை​யாடினர். இந்த போட்டோ உலகம் முழு​வதும் வைரலாக பரவியது.

இந்த போட்​டோவை ட்ரூத் சோஷியல் சமூக ஊடகத்​தில் பகிர்ந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ” இந்​தி​யா​வை​யும், ரஷ்​யா​வை​யும், மோச​மான சீனா​விடம் இழந்து விட்​டோம்” என குறிப்​பிட்​டுள்​ளார். இந்த மாநாட்​டுக்கு பின்பு சீனா, 2-ம் உலகப்​போரின் 80-ம் ஆண்டு நிறைவை முன்​னிட்டு தலைநகர் பெய்​ஜிங்​கில் பிரம்​மாண்ட ராணுவ பேரணியை நடத்​தி​யது.

இதில் ரஷ்ய அதிபர் புதின் மற்​றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்​னிடம், சீன அதிபர் ஜின்​பிங் நெருங்​க​மாக பேசிக் கொண்​டிருந்​தார். இது குறித்​தும் ஏற்​கெனவே கருத்து தெரி​வித்த அதிபர் ட்ரம்ப், “அமெரிக்கா​வுக்கு எதி​ராக சீன அதிபர் ஜி ஜின்​பிங் சதி​செய்​யும் வேளை​யில், அதிபர் புதினுக்​கும், அதிபர் கிம் ஜாங் உன்​னுக்​கும் வாழ்த்​துக்​கள்​” என குறிப்​பிட்​டிருந்​தார்​ என்​ப​து குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply