இந்திய கலாச்சாரங்களை முன்வைக்கும் உலகப் புகழ்பெற்ற “விஸ்வரங்” விழா இந்த ஆண்டு இலங்கையில்!

இந்திய இலக்கியம், கலை மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றை உலகளாவிய சூழலில் முன்வைக்கும் உலகப் புகழ்பெற்ற “விஸ்வரங்” விழா, இந்த ஆண்டு 29 மற்றும் 30 ஆகிய திகதிகளில் இலங்கையில் நடைபெறுகிறது.

போபாலில் உள்ள ரவீந்திரநாத் தாகூர் பல்கலைக்கழகம், விஸ்வரங் அறக்கட்டளை மற்றும் கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் சுவாமி விவேகானந்தா கலாச்சார மையம் ஆகியவற்றின் கீழ் இந்த விழா கூட்டாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இரண்டு நாள் சர்வதேச நிகழ்வு இலங்கையின் தலைநகரான கொழும்பில் நேற்று (29) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

ஆரம்ப நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தலைமை விருந்தினராக கலந்து கொண்டதுடன் சிறப்பு விருந்தினர்களாக இலங்கையின் புத்த சாசனம், மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான அமைச்சர் ஹினிதும சுனில் செனவி மற்றும் பிரபல எழுத்தாளரும் முன்னாள் இராஜதந்திரியுமான பவன் கே. வர்மா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதவேளை, ஆரம்ப நிகழ்விற்கு விஸ்வரங் இயக்குனர் சந்தோஷ் சௌபே தலைமை தாங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளைச் சேர்ந்த புகழ்பெற்ற அறிஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் பங்கேற்கவுள்ளனர்.

இந்திய மொழிகள் மற்றும் இலக்கியத்தின் பரந்த பார்வை, கலாச்சார நல்லிணக்கம், நாட்டுப்புற இலக்கியங்களின் ஒப்பீட்டு ஆய்வுகள், நிகழ்நிலை தளங்கள் மூலம் இந்தி கற்பிப்பதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் இந்தியில் தொழில் வாய்ப்புகள் போன்ற தலைப்புகளில் பல்வேறு அமர்வுகள் விவாதங்களை நடத்தவுள்ளதுடன் தெற்காசிய கவிஞர்கள் சந்திப்பு, கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் மாணவர் தொடர்புகளும் இன்று நடைபெற உள்ளது.

இந் நிகழ்வில், இந்தியா, இலங்கை, நேபாளம், மியான்மர், தாய்லாந்து மற்றும் 10க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த புகழ்பெற்ற அறிஞர்கள் மற்றும் படைப்பாற்றல் மிக்க குரல்கள் தீவிரமாக பங்கேற்கவுள்ளனர்.

நிகழ்வு நிறைவு அமர்வில் முக்கிய சிறப்பம்சமாக பிரபல எழுத்தாளர்களின் சர்வதேச கவிதை வாசிப்பு இடம்பெறும்.

விழாவின் போது, இந்தி கல்வி மற்றும் ஆராய்ச்சியை மேலும் மேம்படுத்துவதற்காக, ரவீந்திரநாத் தாகூர் பல்கலைக்கழகம் கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் இந்தி படிப்பில் பணிபுரியும் பிற நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் நிகழ்வு இடம்பெறும்.

இதேவேளை, விஸ்வரங்கின் நோக்கம் இந்திய இலக்கியம், கலை மற்றும் கலாச்சாரத்தை உலக அரங்கில் நிலைநிறுத்துவதும், அதே நேரத்தில் இளைய தலைமுறையினரை அவர்களின் வேர்களுடன் இணைப்பதும், குறிப்பாக சர்வதேச உரையாடல் மற்றும் நீரோட்டங்களுடன் இணைவதுமாகும் எனவும் இலங்கையில் நடைபெறும் குறித்த நிகழ்வு இந்த திசையில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும் எனவும் விஸ்வரங் இயக்குனர் சந்தோஷ் சௌபே இதன்போது தெரிவித்தார்.

நன்றி

Leave a Reply