இந்திய குடியரசின் பிரதித் தலைவர் பதவிக்கான தேர்தல் இன்று!

இந்திய குடியரசின் பிரதித் தலைவர் பதவிக்கான தேர்தல் இன்று ஆரம்பமாகி நடைபெறுகிறது.

காலை 10 மணிக்கு ஆரம்பமான வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.

இத் தேர்தலில் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் வாக்களிக்கின்றனர்.

இந்த தேர்தலில் ஆளும் பா.ஜ.க கூட்டணி சார்பில் மகாராஷ்டிர ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனும், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி சார்பில் உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டியும் போட்டியிடுகின்றனர்.

குடியரசு பிரதித்தலைவர் பதவியில் இருந்த ஜெகதீப் தன்கர் தனது உடல்நிலையை காரணம் காட்டி, கடந்த ஜூலை 21ஆம் திகதி பதவியை இராஜினாமா செய்தார்.

அவரது இராஜினாமாவை குடியரசுத் தலைவர் திரௌபதிமுர்மு ஏற்றுக்கொண்டார்.

இதையடுத்து, குடியரசு துணைத் தலைவர் பதவி வெற்றிடமானதையடுத்து செப்டம்பர் 9ஆம் திகதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையகம் அறிவித்தது.

அதன்படி இன்று இடம்பெறும் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் இன்று மாலை 6 மணிக்கே எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

நன்றி

Leave a Reply