நாம் இந்த NPP ஆட்சியைக் கவிழ்க்கச் சூழ்ச்சி செய்யவில்லை. அதற்கான உத்தரவாதத்தை நாம் வழங்குகின்றோம். கடந்த ஒரு வருடமாக நாம் எவ்வித பேரணியையும் நடத்தவில்லை. நாசகார செயலிலும் ஈடபடவில்லை. அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்குப் பிரதான எதிர்க்கட்சியான SJB எவ்வித சூழ்ச்சிகளிலும் ஈடுபடாது என்று முஜிபுர் ரஹ்மான் Mp தெரிவித்துள்ளார்.
NPP அரசாங்கம் இந்த நாட்டை ஐந்து வருடங்களுக்கு ஆள வேண்டும். தமது பொறுப்பை நிறைவேற்றாமல் அவர்கள் தப்பிச் செல்ல முடியாது.
ஆனால், NPP எதிரணியில் இருந்திருந்தால் இந்த அனர்த்த நேரம் என்ன நடந்திருக்கும்” என்றும் முஜிபுர் ரஹ்மான் எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.

