இரத்தினபுரி வைத்தியசாலையின் வைத்தியர்கள் அடையாள வேலைநிறுத்தம்!

இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் இன்று (02) வைத்தியசாலை பணிப்பாளரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் முடிவு செய்துள்ளது.

இந்த பிரச்சினை தொடர்பாக தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு சுகாதார அமைச்சு முன்னர் ஒப்புக்கொண்ட போதிலும், அந்த ஒப்பந்தங்களை செயல்படுத்த அதிகாரிகள் தவறிவிட்டதாக அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டுகிறது.

எனவே, இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் இன்று காலை 8.00 மணி முதல் நாளை காலை 8,00 மணி வரை பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் திட்டமிட்டுள்ளது.

இருந்த போதிலும், வைத்தியசாலைக்குள் அவசர மற்றும் உயிர்காக்கும் சிகிச்சை சேவைகள் தொடர்ந்து வழங்கப்படும் என்றும், ஆனால் அனைத்து அன்றாட சிகிச்சை சேவைகளும் பாதிக்கப்படும் என்றும் அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

நன்றி

Leave a Reply