67
இலங்கையில் காணப்படும் பாரம்பரியமான மாளிகைகளில் ஒன்றான நல்லூர் மந்திரிமனை பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமானது, இதனை பாதுகாப்பதற்காக சம்பந்தப்பட்ட அமைச்சரோடு கலந்துரையாடி, பாதுகாப்பதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அந்நிலையில் , மந்திரிமனையினை நெடுஞ்சாலைகள் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க , கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர், நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் உள்ளிட்டோர் நேற்றைய தினம் வியாழக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டனர்
அதன் போது, தொல்லியல் திணைக்களத்தின் யாழ். பிராந்திய உதவி பணிப்பாளர் யு.ஏ பத்துலஜீவ மற்றும் தொல்லியல் திணைக்களத்தின் புனர்நிர்மாண உத்தியோகத்தர் கபிலன் ஆகியோருடன் அமைச்சர்கள் கலந்துரையாடி , மந்திரிமனையை பாதுகாக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு தெரிவித்தனர்.