53
இலங்கையில் இதுவரை கண்டறியப்பட்ட நிலத்தடி நீர் ஊற்றுகளில் மிகப்பெரிய நீர் ஊற்று ஒன்று காலி – தெனியாய பிரதான வீதியில், பிட்டபெத்தர காவல்நிலையத்திற்கு அருகில் கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. குழாய் கிணறு ஒன்றை அமைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சி பணிகளின் போது இந்த நீர் ஊற்று கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதுகுறித்து தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தென் மாகாணத்திற்கான புவியியலாளர் இந்திரஜித் கமகே தெரிவித்ததாவது, இந்த ஊற்றில் இருந்து நிமிடத்திற்கு சுமார் 10,000 லீட்டர் அளவிற்கு தொடர்ச்சியாக நீரைப் பெற முடியும் என கூறினார். இலங்கையில் இவ்வளவு பெரிய அளவிலான நிலத்தடி நீர் ஊற்று கண்டறியப்படுவது இதுவே முதல் முறையாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதற்கு முன்னர் மடு பகுதியில் கண்டறியப்பட்ட நீர் ஊற்றே மிகப்பெரியதாகக் கருதப்பட்ட நிலையில், தற்போது காலியில் கண்டறியப்பட்ட இந்த புதிய ஊற்று அந்த சாதனையை முறியடித்துள்ளது. மேலும், பாறை அடுக்குகளை ஆய்வு செய்து, அவற்றுக்கிடையேயான வெடிப்புகள் வழியாக நிலத்தடி நீர் தேங்கியிருக்கும் இடங்களை நவீன தொழில்நுட்ப கருவிகள் மூலம் துல்லியமாக கண்டறிந்து இந்த அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
#SriLankaWater #GroundwaterDiscovery #Pittabeddara #WaterResourceRecord #GeologySriLanka#இலங்கை #காலி #நிலத்தடிநீர் #நீர்ஊற்று #தேசியநீர்வழங்கல் #சாதனை #சுற்றுச்சூழல்
