இலங்கையில் தங்கியுள்ள சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா நீடிப்பு: அரசாங்கம் அறிவிப்பு!

இலங்கையில் தற்போது தங்கியுள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு இரண்டு வார காலத்திற்கு இலவச விசா நீடிப்பு வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. விமானப் பயணங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ள காரணத்தினால், சுற்றுலாப் பயணிகள் எதிர்கொள்ளும் அசௌகரியங்களைக் கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ இத்தகவலை உறுதிப்படுத்தினார். இந்த விசா நீடிப்புக்காக வெளிநாட்டவர்களிடமிருந்து எவ்விதக் கட்டணமும் அறவிடப்பட மாட்டாது என்றும் அவர் மேலதிகமாக வலியுறுத்தினார்.

இதன்படி, விசா காலம் முடிவடைந்த நிலையில் இலங்கையில் தங்கியிருக்கும் சுற்றுலாப் பயணிகள், எவ்வித மேலதிகக் கட்டணமும் இன்றி அடுத்த இரண்டு வாரங்களுக்குத் தங்கியிருக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply