இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக, தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரரும் பயிற்சியாளருமான கேரி கிர்ஸ்டன் நியமிக்கப்பட்டுள்ளார்.
சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனம் இதனைத் தெரிவித்துள்ளது. இந்நியமனம் 2026 ஏப்ரல் 15 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும். அவர் 2 ஆண்டுகள் அந்தப் பதவியில் நீடிப்பார்.
1993 முதல் 2004 வரையிலான தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில், டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் மொத்தம் 14,087 ஓட்டங்களைக் குவித்துள்ளார். இதில் 21 டெஸ்ட் சதங்களும் 13 ஒருநாள் சதங்களும் அடங்கும்.
2027 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா, நமீபியா மற்றும் சிம்பாப்வே ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ள ஐசிசி உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு இலங்கை அணியைத் தயார்படுத்துவதே இவரின் முதன்மை பொறுப்பாகும்.

