இஸ்ரேலுக்கு உள்ளேயும் வெளியேயும் சர்வதேச அளவில் பொய்ப் பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன

காசா பகுதியில் மக்கள் கொல்லப்படுவது, பாரிய சேதங்கள் இடம்பெறுவது அத்தியாவசிய உதவி பொருள் விநியோகம் பாதிப்படைவது போன்றவற்றிற்கு ஹமாசே பொறுப்பேற்க வேண்டும் என இஸ்ரேலியப் பிரதமர்  நெத்தன்யாகு தெரிவித்துள்ளார். 

ஹமாஸ் தம்வசமுள்ள பணியக் கைதிகளை விடுவிப்பதுடன், ஆயுதங்களைக் கைவிடும் பட்சத்தில் காசாவில் நாளையே போர் நிறைவடைந்து விடும். இஸ்ரேலுக்கு உள்ளேயும் வெளியேயும் சர்வதேச அளவில் பொய்ப் பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. 

காசாவை ஆக்கிரமிப்பது இஸ்ரேலின் நோக்கமல்ல, இராணுவ மயமாக்கப்படும் காசாவை விடுவித்து இஸ்ரேலின் இராணுவம் பாதுகாப்பை மேற்கொள்ளும். இஸ்ரேல் அல்லாத சிவில் நிர்வாகம் காசாவை பொறுப்பேற்கச் செய்வதே தங்கள் இலக்கு எனவும்  நெத்தன்யாகு தெரிவித்துள்ளான்

நன்றி

Leave a Reply