இஸ்லாமிய எதிர்ப்பு நடவடிக்கைகளில் முன்நின்றவர் இஸ்லாத்தினால் ஈர்க்கப்பட்டார்

ஆஸ்திரேலியாவில் இஸ்லாமிய எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஒரு காலத்தில் முன்னணி நபராக இருந்த ஷெர்மன் பர்கெஸ் இஸ்லாத்திற்கு மாறியுள்ளார். அவர் புனித கலிமாவை ஏற்றுக்கொண்டு இப்போது இஸ்லாத்தை பின்பற்றி வருவதை பகிரங்கமாக உறுதிப்படுத்தியுள்ளார்.

பர்கெஸ் முன்னர் ஐக்கிய தேசபக்தர்கள் முன்னணியின் (UPF) தலைவராக இருந்தார்.   குறிப்பாக  தீவிர வலதுசாரி நபர்களுடன் பள்ளிவாசல் கட்டுமானத்திற்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டார். 

தனது சமூக ஊடக பக்கத்தில் தனது அட்டைப்படத்தை கலீமா இடம்பெறும் பாலஸ்தீனிய கொடியாக மாற்றினார்.

இந்த மாற்றம் ஏன்? மேற்கத்திய ‘சீரழிவு’ மீதான ஏமாற்றத்தை, போதைப்பொருள் துஷ்பிரயோகம்  பாரம்பரிய மதிப்புகளின் அழிவு உட்பட  தனது மதமாற்றத்திற்கான முக்கிய காரணங்களாக பர்கெஸ் குறிப்பிட்டார். 

முஸ்லிம் சுதந்திர இயக்கத்தின் தலைவர் யூஸ்ரா ரோஸுடன் தொடர்பு கொண்டதன் மூலம் இஸ்லாத்தைப் பற்றிய தெளிவான புரிதல் கிடைத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

, ‘2015-2016 வரை, நான் ஒரு முஸ்லிமுடன் பக்கவாட்டில் நிற்பதை நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள்… ஆனால் இப்போது விஷயங்கள் மாறிவிட்டன. இப்போது நான் முஸ்லிம்களுடன் பக்கவாட்டில் நிற்பேன்…’ என குறிப்பிட்டுள்ளார்.

தீவிர வலதுசாரி சமூகத்தில் தனது முன்னாள் கூட்டாளிகள் எதிர்மறையாக நடந்து கொண்டதாகவும் அவர்களில் பலரை அதிக குடிகாரர்கள் மற்றும் ஒழுக்கம் இல்லாதவர்கள் என்றும் வர்ணித்ததாகவும் பர்கெஸ் குறிப்பிட்டார். 

உடல்நலம் மது மற்றும் போதைப்பொருட்களைத் தவிர்ப்பது மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றில் இஸ்லாம் கொண்டுள்ள முக்கியத்துவத்தை அவர் பாராட்டியுள்ளார்.

நன்றி

Leave a Reply