ஈரானில் அமைதியற்ற சூழல் – இண்டிகோ விமானசேவை இரத்து

ஈரானில் அமைதியற்ற சூழல் நீடிப்பதால் இண்டிகோ விமான நிறுவனம் தமது சேவையை பெப்ரவரி 28வரை இரத்துச் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானில் உள்நாட்டு போராட்டம் வெடித்துள்ளதையடுத்து அங்கு அமைதியற்ற சூழல் நீடித்துள்ளமையால் ஈரான் தமது வான்வெளியை மூடியது.

இந் நிலையில் ,  ஈரானில் நிலவும் சூழலை கருத்திற் கொண்டு பெப்ரவரி 28ஆம் திகதி வரை இண்டிகோ விமான நிறுவனம் தமது சேவையை இரத்துச் செய்வதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

 

நன்றி

Leave a Reply