ஆஸ்திரேலியாவில் அரசியல் தஞ்சம் கோரியிருந்த ஈரான் மகளிர் கால்பந்து அணியின் வீராங்கனைகளில் ஒருவர், மீண்டும் ஈரான் திரும்ப முடிவு செய்துள்ளதை அடுத்து, அங்கு தங்கியிருப்பவர்களின் எண்ணிக்கை ஆறாகக் குறைந்துள்ளது. ஆசியக் கிண்ணக் கால்பந்து போட்டிகளுக்காக ஆஸ்திரேலியா வந்திருந்த ஈரான் மகளிர் அணியினர், கடந்த மார்ச் 2-ஆம் திகதி நடைபெற்ற போட்டியின் போது ஈரான் தேசிய கீதத்தைப் பாடாமல் மௌனம் காத்தனர். ஈரானில் போர் தொடங்கியிருந்த சூழலில், அவர்களின் இந்தச் செயல் ஒரு எதிர்ப்பு நடவடிக்கையாகவோ அல்லது போரில் […]
