43
ஈரான் அரசுக்கு எதிராக கனடா தனது நிலைப்பாட்டை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. ஈரானில் நிலவும் மனித உரிமை மீறல்கள் மற்றும் அடக்குமுறைகளைச் சுட்டிக்காட்டி, அந்நாட்டின் முக்கிய புள்ளிகள் மீது கனடா புதிய பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.
மியூனிக் பாதுகாப்பு மாநாட்டில் (Munich Security Conference) உரையாற்றிய கனடாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் அனிதா ஆனந்த், “ஈரானில் ஆட்சி மாற்றம் ஏற்படும் வரை அந்நாட்டுடன் மீண்டும் தூதரக உறவுகளை ஏற்படுத்த வாய்ப்பே இல்லை” என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த 2012-ஆம் ஆண்டிலிருந்தே ஈரான் உடனான தூதரக உறவுகளை கனடா துண்டித்துள்ளது. PS752 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட விவகாரம் மற்றும் போராட்டக்காரர்கள் மீதான வன்முறை போன்றவற்றால் இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் உச்சகட்டத்தில் உள்ளது.
தற்போதைய நிலவரப்படி, கனடா இதுவரை ஈரானைச் சேர்ந்த 222 தனிநபர்கள் மற்றும் 256 நிறுவனங்கள் மீது தடைகளை விதித்துள்ளது.
ஈரானிய மக்களின் உரிமைகளுக்காகவும், சர்வதேச சட்டங்களை நிலைநாட்டவும் கனடா தொடர்ந்து உறுதியாக இருக்கும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
________________________________________
