காசாவில் கடந்த மே மாத இறுதியில் இருந்து தற்போது வரை உணவு மற்றும் உதவிப்பொருட்களுக்காக காத்திருந்த, 1,760 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை தெரிவித்துள்ளது.
அதன்படி, மே 27 ஆம் திகதி முதல் கடந்த 13 ஆம் திகதி வரை, 994 பேர் காசா மனிதாபிமான அறக்கட்டளை தளங்களுக்கு அருகிலும், 766 பேர் விநியோக வாகனங்களின் பாதைகளிலும் கொல்லப்பட்டுள்ளனர்.
அத்துடன், ஓகஸ்ட் முதலாம் திகதி ஐக்கிய நாடுகள் சபை, அறிவித்த இறப்பு எண்ணிக்கை ஆயிரத்து 373 ஆக இருந்த நிலையில், கடந்த 15 நாட்களில் 387 பேர் உதவிக்காக காத்திருந்தபோது கொல்லப்பட்டுள்ளனர்.