உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரம்! – Athavan News

அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதியானது கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடும் போது இன்று (15) சற்று குறைந்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரங்களுக்கு அமைவாக,

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதியானது இன்று முறையே 298.25 ரூபாவாகவும், 305.77 ரூபாவாகவும் உள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை விலையானது முறையே 298.11 ரூபாவாகவும், 305.65 ரூபாவாகவும் காணப்பட்டிருந்தது.

ஏனைய பல வெளிநாட்டு நாணயங்களின் பெறுமதிக்கு எதிராகவும் இலங்கை ரூபாவின் மதிப்பு இன்று குறைந்துள்ளது.

அதே நேரத்தில் வளைகுடா நாணயங்களுக்கு எதிராக அதன் மதிப்பு உயர்ந்துள்ளது.

 

blank

நன்றி

Leave a Reply