“எனக்கு நோபல் பரிசு வழங்காவிட்டால் அது நாட்டுக்கே அவமானம்” – ட்ரம்ப் வேதனை | Trump says not winning Nobel would be insult to US

வாஷிங்டன்: அமைதிக்கான நோபல் பரிசை தனக்கு வழங்காவிட்டால், அது நாட்டுக்கே அவமானம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார்.

அமெரிக்கா ராணுவ அதிகாரிகள் முன்னிலையில் பேசிய ட்ரம்ப், “எனக்கு நோபல் பரிசு தருவார்களா? நிச்சயமாக மாட்டார்கள். ஒரு துரும்பை கூட கிள்ளிப் போடாத யாரோ ஒருவருக்கு அதை கொடுப்பார்கள். அமைதிக்கான நோபல் விருது எனக்கு தரப்படாவிட்டால் அது நம் நாட்டுக்கு ஒரு பெரிய அவமானமாக இருக்கும். எனக்கு அது வேண்டாம், நாடு அதைப் பெற வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நம் நாட்டுக்கு அது கிடைக்க வேண்டும்.

யுத்தங்கள் எதுவும் முடியவே முடியாது என்று பலரும் சொன்னார்கள். 31 ஆண்டுகள் வரை சில போர்கள் நீடித்தன. ஒரு போர் 36 ஆண்டுகள் நீடித்தது. ஆனால் நான் ஏழு போர்களை முடிவுக்கு கொண்டு வந்தேன். அவற்றில் பல்லாயிரக்கணக்கான மக்கள் மாண்டு போனார்கள். நான் அமைதிக்கான நோபல் பரிசுக்கு மிகவும் தகுதியாவனன்” இவ்வாறு ட்ரம்ப் தெரிவித்தார்.

வரும் அக்டோபர் 10ஆம் தேதி இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் யார் யாருக்கு வழங்கப்பட உள்ளன என்பது குறித்த அறிவிப்புகள் வெளியாக உள்ள நிலையில் ட்ரம்பின் இந்த பேச்சு கவனிக்கத்தக்கது.

நன்றி

Leave a Reply