எனது தந்தை ஒரு இமாமாக இருந்தாலும் அவரது, ஊக்கமும் பிரார்த்தனையுமே நான் நீதிபதியாக நிற்கக் காரணம்

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஹபீபா புகாரி  32-வயது. பீகார் நீதித்துறை சேவைகள் தேர்வில் வெற்றி பெற்று நீதிபதியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பீகார் பொதுச் சேவை ஆணையம் (BPSC) நடத்திய இந்தத் தேர்வில் அவர் மாநில அளவில் 30-வது இடத்தை  பிடித்துள்ளார்.

இவர் பீகாரின் முங்கர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை முகமது அகமது புகாரி, முங்கரில் உள்ள குல்சார் போகர் மசூதியின் இமாம் ஆவார்.

அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் (AMU) சட்டப் படிப்பை (BA LLB மற்றும் LLM) முடித்துள்ளார்.

தற்போது அவர் பாகல்பூர் நீதிமன்றத்தில் பயிற்சி சிவில் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஹபீபா தனது வெற்றியைப் பற்றிக் குறிப்பிடும்போது, “எனது தந்தை ஒரு இமாமாக இருந்தாலும், பெண் கல்விக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தார்… அவரது ஊக்கமும் பிரார்த்தனையுமே நான் இன்று நீதிபதியாக நிற்கக் காரணம்” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

மிகவும் எளிய பின்னணியிலிருந்து வந்து, விடாமுயற்சியால் நீதிபதியாக உயர்ந்த ஹபீபா புகாரியின் இந்தச் சாதனை பலருக்கும் ஊக்கமாக அமைந்துள்ளது வாழ்த்துக்கள்..!

Mohamed Abdullah  

நன்றி

Leave a Reply