BRO Recruitment 2025: எல்லைப்புறச் சாலைகள் அமைப்பு (Border Roads Organization) இந்திய எல்லைப்புறச் சாலைகளைப் பராமரிக்கும் அமைப்பாகும். எல்லைப்புறச் சாலைகள் அமைப்பு நிறுவனமானது 2025 ஆம் ஆண்டிற்கான ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போது காலியாகவுள்ள 542 Vehicle Mechanic, MSW (Painter), MSW (Driver Engine Static) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 24.11.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
BRO Recruitment 2025
| Description | Details |
| வேலை பிரிவு | Central Govt Jobs 2024 மத்திய அரசு வேலை 2024 |
| துறைகள் | எல்லை சாலைகள் அமைப்பு (BRO) Border Roads Organisation (BRO) |
| காலியிடங்கள் | 542 |
| பணிகள் | Vehicle Mechanic, MSW (Painter), MSW (Driver Engine Static) |
| விண்ணப்பிக்கும் முறை | தபால் மூலம் |
| கடைசி தேதி | 24.11.2025 |
| பணியிடம் | இந்தியா முழுவதும் |
| அதிகாரப்பூர்வ இணையதளம் |
https://bro.gov.in/ |
BRO Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
எல்லைப்புறச் சாலைகள் அமைப்பு வேலைவாய்ப்பு 2025 பின்வரும் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.
| பதவியின் பெயர் | காலியிடம் |
| Vehicle Mechanic | 324 |
| BRO MSW (Painter) | 13 |
| MSW (Driver Engine Static) | 205 |
| மொத்தம் | 542 |
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
கல்வித் தகுதி
எல்லைப்புறச் சாலைகள் அமைப்பு துறை பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் பணிக்கு தொடர்பான பிரிவில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பணிகளுக்கு ஏற்ப கல்வித்தகுதி மாறுபடும். மேலும் விபரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
| பதவியின் பெயர் | BRO Mechanic and MSW (Painter & DES) Eligibility 2025 |
| Vehicle Mechanic | 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் பணிக்கு தொடர்பான பிரிவில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். |
| MSW (Painter) | 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் பணிக்கு தொடர்பான பிரிவில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். |
| MSW (Driver Engine Static) | 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் பணிக்கு தொடர்பான பிரிவில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். |
BRO Recruitment 2025 வயது வரம்பு விவரங்கள்
எல்லைப்புறச் சாலைகள் அமைப்பு துறை வேலைவாய்ப்பு 2025 பணிக்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.
வயது வரம்பு தளர்வு:
| பிரிவு | வயது தளர்வு |
| SC/ ST | 5 ஆண்டுகள் |
| OBC | 3 ஆண்டுகள் |
| PwBD (பொது/EWS) | 10 ஆண்டுகள் |
| PwBD (SC/ ST) | 15 ஆண்டுகள் |
| PwBD (OBC) | 13 ஆண்டுகள் |
BRO Recruitment 2025 சம்பள விவரங்கள்
| பதவியின் பெயர் | சம்பளம் |
| Vehicle Mechanic | Rs.5200-20200/- plus Grade Pay Rs.1900/- |
| MSW (Painter) | Rs.5200-20200/- plus Grade Pay Rs.1900/- |
| MSW (Driver Engine Static) | Rs.5200-20200/- plus Grade Pay Rs.1900/- |
BRO Recruitment 2025 தேர்வு செயல்முறை
எல்லைப்புறச் சாலைகள் அமைப்பு துறை பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் உடல் திறன் தேர்வு (Physical Efficiency Test – PET), Trade Test, எழுத்துத் தேர்வு (Written Test) மற்றும் முதன்மை மருத்துவப் பரிசோதனை (PME) ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
BRO Recruitment 2025 விண்ணப்பக் கட்டணம்:
- ST/SC விண்ணப்பதாரர்களுக்கு – இல்லை
- மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.50/-
- கட்டண முறை: ஆன்லைன்
BRO Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
எல்லைப்புறச் சாலைகள் அமைப்பு துறை வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 11.01.2025 முதல் 24.02.2025 தேதிக்குள் தபால் மூலம் விண்ணப்பங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
- விண்ணப்பப் படிவம் மற்றும் இதுகுறித்த விரிவான விளம்பரத்தை நீங்கள் https://bro.gov.in/ என்ற இணையதளத்தில் காணலாம். அல்லது கீழே கொடுக்கப்படுள்ள லிங்க் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
- விண்ணப்பப் படிவத்தை நீங்கள் இந்தி (Hindi) அல்லது ஆங்கிலம் (English) ஆகிய இரண்டு மொழிகளில் ஏதேனும் ஒன்றில் மட்டுமே பூர்த்தி செய்ய வேண்டும்.
- விண்ணப்பம் உயர்தர A4 அளவுள்ள பான்ட் தாளில் (75 GSM) மட்டுமே, ஒரு பக்கத்தில் நிரப்பப்பட வேண்டும்.
- விண்ணப்ப படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இடத்தில் நீங்கள் கையொப்பமிட வேண்டும். விண்ணப்பப் படிவம் மற்றும் அனுமதி அட்டையில் (Admission Card), சமீபத்தில் எடுக்கப்பட்ட, வண்ணமயமான, பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படம் (4 cm x 5 cm) ஒட்டப்பட்டிருக்க வேண்டும். இந்தப் புகைப்படம் ஒரு மாதத்திற்கு மேல் பழமையானதாக இருக்கக் கூடாது.
- நீங்கள் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை பதிவுத் தபால் (Registered Post) மூலம் மட்டுமே பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்:
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: Commandant, GREF Center, Dighi Camp, Pune-411015
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
| விண்ணப்ப படிவம் | Click Here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |



