எல்.என்.ஜி கனடா ஆலை மீது குற்றச்சாட்டு – ஆய்வில் அதிர்ச்சித் தகவல்! – Athavan News

கனடாவின் பி.சி. (B.C.) வடகடலோரப் பகுதியில் அமைந்துள்ள ‘எல்.என்.ஜி கனடா’ (LNG Canada) எரிவாயு ஆலை, கடந்த சில மாதங்களாக அனுமதிக்கப்பட்ட அளவை விட மிக அதிகப்படியான எரிவாயுவை எரித்து (Gas Flaring) வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விக்டோரியா பல்கலைக்கழகத்தின் (University of Victoria) காற்றுத் தரம் குறித்த ஆராய்ச்சியாளர் லாரா மினெட் (Laura Minet), தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்ற அறிக்கைகளின் மூலம் இந்த விபரங்களை வெளியிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு அக்டோபர் முதல் ஜனவரி வரையிலான நான்கு மாதங்களில், அந்த ஆலை வெளியேற்றிய எரிவாயுவின் அளவு சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்ட அளவை விடப் பல மடங்கு அதிகமாக இருந்துள்ளது:

இந்தக் குற்றச்சாட்டு குறித்து கருத்துத் தெரிவித்துள்ள எல்.என்.ஜி கனடா நிறுவனத்தின் பேச்சாளர், ஆலை தற்போது ஆரம்பகட்டச் செயல்பாடுகளில் (Early operations phase) உள்ளதால், அதிகப்படியான எரிவாயு எரிப்பு என்பது இயல்பான ஒன்று எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஆலை முழுமையான செயல்பாட்டுக்கு வரும்போது இந்த அளவு கணிசமாகக் குறையும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், “எரிவாயு எரிப்பு என்பது மாகாண ஒழுங்குமுறை விதிகளுக்கு உட்பட்ட ஒரு பாதுகாப்பு நடவடிக்கையாகும்.

கனடாவின் முதலாவது பெரிய அளவிலான திரவ இயற்கை எரிவாயு (LNG) ஏற்றுமதி நிலையமான இது, கடந்த கோடையில் தனது முதல் சரக்குகளை அனுப்பத் தொடங்கியது.

மார்ச் தொடக்கத்தில் இருந்து மட்டும் 10 முறை எரிவாயு எரிப்பு நிகழ்வுகள் குறித்து அந்த நிறுவனம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த 3 மணிநேர எரிப்பின் போது, 10 முதல் 15 மீட்டர் உயரத்திற்குத் தீப்பிழம்புகள் எழுந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த ஆலை தனது உற்பத்தித் திறனை இரண்டு மடங்காக அதிகரிக்கத் திட்டமிட்டுள்ள நிலையில், தற்போது வெளியாகியுள்ள இந்த ஆய்வுத் தகவல்கள் சூழலியல் ஆர்வலர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளன.

 

நன்றி

Leave a Reply