ஐந்து நாட்கள் சிறப்பாக நடைபெற்ற யாழ் சர்வதேச சதுரங்கப் போட்டி இனிதே நிறைவு!

யாழ்ப்பாண மாவட்ட சதுரங்கச் சங்கம் (JDCA) தலைமையில் நடைபெற்ற யாழ்ப்பாண சர்வதேச சதுரங்கப் போட்டி டிசம்பர் 3 முதல் 7 வரை ஐந்து நாட்கள் சிறப்பாக நடைபெற்றது.

இறுதிநாளான 7ஆம் திகதி மாலை 7.00 மணிக்கு நடைபெற்ற பரிசளிப்பு விழாவுடன் போட்டி சிறப்பாக நிறைவுற்றது.

blank

இந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் வெளிநாடுகள் உட்பட பல்வேறு பிராந்தியங்களில் இருந்து 700 வீரர்கள் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

திறந்த பிரிவில் இந்திய வீரர் டி. டினேஸ் ராஜன் மிகச் சிறப்பாக விளையாடி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

பெண்கள் பிரிவில் இந்தியா, மகாராஷ்டிராவைச் சேர்ந்த பாக்கியஷிறி பட்டில் வெற்றிக்கிண்ணத்தை தட்டிச் சென்றார்.

blank

பரிசளிப்பு விழாவின் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண பல்கலைக்கழக பேராசிரியர் ஐங்கரன் அவர்கள் கலந்து கொண்டு போட்டியின் சிறப்பம்சங்களைப் பாராட்டினார்.

மேலும் நொதேர்ன் சென்ட்ரல் வைத்தியசாலையின் நிர்வாக இயக்குனர் கேசவராஜ், பிரபல பௌதிக ஆசிரியர் குமரன் ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று சிறப்புரைகள் வழங்கினர்.

blank

JDCA ஏற்படுத்திய இந்த சர்வதேச மட்டப் போட்டி யாழ்ப்பாணத்தை உலக சதுரங்க வரைபடத்தில் மேலும் உயர்த்தியதுடன், வடமாகாணத்தில் சதுரங்க விளையாட்டின் வளர்ச்சிக்குத் துணைபுரியும் என்பதையும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

மேலும் போட்டிக்கு உதவிய, அனுசரனை வழங்கி அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொண்டார்கள்.

 

blank

நன்றி

Leave a Reply