ஒக்டோபரில் ஹேக் செய்யப்பட்ட இங்கிலாந்தின் வெளிவிவகார அலுவலகம்!

இங்கிலாந்தின் வெளிவிவகார காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகம் (FCDO) கடந்த ஒக்டோபர் மாதத்தில் சைபர் தாக்குதலுக்கு உள்ளானதாக பிரிட்டிஷ் வர்த்தக அமைச்சர் கிறிஸ் பிரையன்ட் (Chris Bryant) தெரிவித்துள்ளார்.

இருப்பினும், இந்தத் தாக்குதல் எந்தவொரு தனிநபருக்கும் குறைந்த ஆபத்தையே ஏற்படுத்தும் என்றும் அவர் பொதுமக்களுக்கு உறுதியளித்தார். 

அதேநேரம், தாக்குதலை யார் செய்தார்கள் என்பது தெளிவாக தெரியவில்லை என்று பிரையன்ட் உள்ளூர் செய்திச் சேவைகளிடம் கூறியுள்ளார்.

இந்த ஊடுருவலில் சீன ஹேக்கர் குழு ஈடுபட்டுள்ளதாக தி சன் பத்திரிகைச் சேவை வெளியிட்ட அறிக்கையைத் தொடர்ந்து பிரிட்டிஷ் வர்த்தக அமைச்சரின் இந்தக் கருத்து வந்துள்ளது.

இந்த ஊடுருவலுக்குப் பொறுப்பான சீன சைபர் கும்பல் ஸ்டோர்ம் 1849 (Storm 1849) என சன் பத்திரிகை சுட்காட்டியுள்ளது.

ஊடுருவலில் பல்லாயிரக்கணக்கானவர்களின் விசா விவரங்கள் திருடப்பட்டிருக்கலாம் என்றும் என்றும் சன் பத்திரிகை சந்தேகம் வெளியிட்டுள்ளது.

இந்த ஆண்டு பெரிய பிரித்தானிய நிறுவனங்கள் மீதான இரண்டு பெரிய சைபர் தாக்குதல்களைத் தொடர்ந்து வெளிவிவகார அலுவலகத்தின் மீதான இந்த தாக்குதல் வந்துள்ளது.

இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் டிசம்பர் மாத தொடக்கத்தில் சீனா ஐக்கிய இராஜ்ஜியத்துக்கு தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களை ஏற்படுத்துவதாகக் குற்றம் சாட்டியமையும் குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply