கரூர் சம்பவத்தில் யாரையும் குற்றம் சாட்ட விரும்பவில்லை – நிர்மலா சீதாராமன்

கரூர் போன்றதொரு சம்பவம் நாட்டில் இனி நடக்கக்கூடாது என மத்திய நிதி அமைச்சர்  நிர்மலாநிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

கரூர் கூட்ட நெரிசலால் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை  சந்தித்து ஆறுதல் தெரிவித்ததன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து  கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது “கரூரில் நடந்தது அதிர்ச்சி சம்பவம்.  பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்ததால் ஏற்பட பாதிப்புதான் இந்த நெரிசல். பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் ஏழை குடும்பங்களை சேர்ந்தவர்கள்.

blank

தங்களது உறவினர்களை இழந்து அவர்கள் கதறி அழுவதை பார்க்க முடியவில்லை. அவர்களிடம் வார்த்தைகளால் ஆறுதல் கூற முடியவில்லை. மிகவும் பரிதாபமான நிலைமை. இனி இதுபோன்று ஒரு சம்பவம் நாட்டில் நடக்கக்கூடாது. சம்பவம் அறிந்து பிரதமர் மோடி கரூர் வருவதாக கூறினார். ஆனால் பல்வேறு காரணங்களால் அவரால் வர முடியவில்லை.

ஆகவே மத்திய அரசு சார்பில் நாங்கள் வந்துள்ளோம். இந்த சம்பவத்தில் எந்த ஒரு கட்சியையும் குறிப்பிட்டு பேச விரும்பவில்லை. யாரையும் குற்றம் சாட்ட விரும்பவில்லை. கட்சி சார்பில் விமரசனங்களை முன் வைக்க நான் வரவிலை. யார் மீது தவறு என்பதை நிர்ணயிக்க எனக்கு அதிகாரம் இல்லை. கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய அரசு துணை நிற்கும்”இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply