தமிழ்நாடு – கரூரில் தமிழக வெற்றி கழக பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சிறுவனின் தந்தை தாக்கல் செய்த மனு உள்ளிட்ட தமிழக அரசின் மனுக்கள் மீதான உத்தரவை உச்சநீதிமன்றம் நாளைய தினம் (13) பிறப்பிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இது தொடா்பான மனுக்கள் நாளை விசாரிக்கப்படும் வழக்குகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, குறித்த விவகாரத்தில் நேற்றுமுன்தினம்(10) நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி, என்.வி. அஞ்சாரியா ஆகியோா் அடங்கிய அமா்வு விரிவாக விசாரணை நடத்தி தமிழக வெற்றிக் கழகம், தமிழக அரசு, பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தை ஆகியோரின் தரப்பு வாதங்களை கேட்டுப் பதிவு செய்தது.
இந்நிலையில் இந்த மனுக்கள் மீதான விசாரணை நாளையத் தினத்திற்கு பட்டியலிடப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடா்பாக பொலிஸார் பதிவு செய்துள்ள வழக்கில் தமிழக வெற்றி கழகத்தின் முக்கியத் தலைவா்களான என். ஆனந்த், சி.டி.ஆா். நிா்மல் குமாா் உள்ளிட்டோா் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இதில் கைதாகாமல் இருக்க இருவா் தரப்பிலும் தாக்கல் செய்யப்பட்ட முன்பிணை மனுக்களை சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளை கடந்த 3-ஆம் திகதி நிராகரித்தமை குறிப்பிடத்தக்கது.