கல்கிசை பொலிஸ் பிரிவின் அரலிய வீட்டுவசதிப் பகுதியில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில்
ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் இருவர் படுகாயமடைந்துள்ளதுடன் ஆயுதங்களால் தாக்கப்பட்ட ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று (01) மாலை இடம்பெற்றுள்ளது.
குறித்த மோதலில் அங்குலானை பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
காயமடைந்தவர்களில் ஒருவர் லுனாவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாகவும், காயமடைந்த மற்றொருவர் மேலதிக சிகிச்சைக்காக களுபோவில வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் கல்கிஸ்சை பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் மேலும் தப்பிச் சென்ற சந்தேக நபர்களைக் கைது செய்ய கல்கிசை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.