கல்முனை மாநகர சபையில் இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு விசாரணை!











கல்முனை மாநகர சபையில் இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு விசாரணை! – Athavan News

































கல்முனை மாநகர சபையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற இலஞ்ச ஊழல் தொடர்பில் ஆராயும் முகமாக   இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கடந்த காலங்களில் கல்முனை மாநகர சபையில் இடம்பெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் அதிகார துஸ்பிரயோகங்கள்  ஊழல்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கமை வியாழக்கிழமை(11)  இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் அங்கு சென்று பல்வேறு விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.இதன்போது  மாநகர சபையில் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட வேலைவாய்ப்பு முறையற்ற ஆட்சேர்ப்பு வளங்கள் மீதான துஸ்பிரயோகம் முறையற்ற கேள்வி கோரல்கள் வாகன பராமரிப்பில் துஸ்பிரயோகம் உட்பட பல்வேறு விடயங்கள்  தொடர்பில்  ஆராயப்பட்டன.

மேலும் கடந்த காலங்களில் குறித்த மாநகர சபையில் கடமையாற்றிய ஆணையாளர் உட்பட உயரதிகாரிகளின் அதிகார துஸ்பிரயோகங்கள் குறித்தும் புலனாய்வு மேற்கொள்ளப்பட்டதுடன் அவை தொடர்பிலான கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய  ஆவணங்கள் உட்பட ஆதாரங்கள் திரட்டப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தவிர கடந்த காலங்களில் கல்முனை மாநகர சபையில் இடம்பெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் அதிகார துஸ்பிரயோகங்கள் தொடர்பில் பல  நீதிமன்றங்களில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ளமையும்  சுட்டிக்காட்டத்தக்கது.

 

நன்றி

Leave a Reply