காசா நகரத்தின் அல்-ஷிஃபா மருத்துவமனை அருகே இஸ்ரேலிய தாக்குதலில் குறைந்தது ஐந்து அல் ஜசீரா செய்திச் சேவையின் ஊடகவியலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் அல் ஜசீரா செய்தியாளர்கள் அனஸ் அல்-ஷெரிப் மற்றும் மொஹமட் கிரீகே, கேமராமேன்கள் இப்ராஹிம் ஜாஹர், மோமன் அலிவா மற்றும் மொஹமட் நௌபால் ஆகியோர் அடங்குவர் என்று செய்திச் சேவை தெரிவித்தார்.
அல்-ஷிஃபா மருத்துவமனையின் பிரதான வாயிலுக்கு வெளியே ஊடகவியலாளர்களுக்கான கூடாரத்தை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் இறந்த ஏழு பேரில் ஊடகவியலாளர்களும் அடங்குவர் என அல் ஜசீரா தெரிவித்துள்ளது.
தாக்குதலுக்குப் பின்னர், இஸ்ரேலிய இராணுவம் ஒரு அறிக்கையில் அனஸ் அல்-ஷெரீப்பை மருத்துவமனையை குறிவைத்து தாக்குதல் நடத்தியதை ஒப்புக் கொண்டது.
அதேநேரம் உயிரிழந்தவர்களில் ஒரு ஊடகவியலாளர்களை “பயங்கரவாதி” என்று முத்திரை குத்தியது.
அவர் “ஹமாஸில் ஒரு பயங்கரவாதப் பிரிவின் தலைவராகப் பணியாற்றியவர்” என்றும் கூறியது.
காசாவில் 22 மாதங்களாக நடந்த போரில் பத்திரிகையாளர்கள் குறிவைக்கப்பட்ட அண்மைய தாக்குதல் இதுவாகும்.
மோதலின் போது சுமார் 200 ஊடக ஊழியர்கள் இதுவரை உயிரிழந்துள்ளதாக ஊடக கண்காணிப்பு அமைப்புகள் தெரிவிக்கின்றன.