தேசிய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்து, 2025 செப்டெம்பர் 24 அன்று ஐக்கிய நாடுகள் சபையின் 80வது கூட்டத் தொடரில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆற்றிய துணிச்சலான மற்றும் கொள்கை ரீதியான உரைக்கு தேசிய தேசிய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்து, 2025 செப்டெம்பர் 24 அன்று ஐக்கிய நாடுகள் சபையின் 80வது கூட்டத் தொடரில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆற்றிய துணிச்சலான மற்றும் கொள்கை ரீதியான உரைக்கு தேசிய ஷூறா சபை பாராட்டு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி தனது உரையில் உலகளாவிய மக்களிடமும் அவர்களது தலைவர்களிடமும் முன்வைத்த பல முக்கிய விடயங்கள் குறித்து, தேசிய ஷூறா சபை 2025 செப்டம்பர் 28, திகதியிட்டு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.
ஜனாதிபதியின் உரையில் உள்ளடங்கியுள்ள விடயங்களை அனைத்து இலங்கையர்களும் நிச்சயம் பாராட்ட வேண்டும் என்றும் அவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
வறுமை ஒழிப்பு, போதைப்பொருள் மற்றும் குற்றங்கள் எதிரான நடவடிக்கை, ஆயுதங்கள் மற்றும் போர்கள், காசாவில் பேரழிவு, பலஸ்தீனர்களின் தனி நாட்டு உரிமை, இனவெறி மற்றும் தீவிரவாதம், சகல பிரஜைகளுக்கும் சம உரிமை போன்ற விடயங்களை தொட்டு ஜனாதிபதி பேசியிருந்ததை குறிப்பிட்டிருந்தது.
தேசிய ஷூறா சபை தனது கடிதத்தில் மேலும், “பிரிவினைக்கு வழிவிடாமல், பல்வகைமையே நமது பலம் என்று கருதி, இலங்கையை ஒரு பல கலாசார, பல மத சமூகம் என்று நீங்கள் தெளிவாக எடுத்துரைத்ததற்கு நாங்கள் நன்றி செலுத்துகிறோம். ஒற்றுமையுடன் இணைந்து வாழ்வது பற்றிய இந்தச் செய்தி, எங்களைப் போன்ற நாட்டின் பல்வேறு பிரிவுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புகளுக்கு மிகப் பெரிய அளவில் நம்பிக்கை அளிக்கிறது.
“வறுமை மற்றும் போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு எதிராகக் குரல் கொடுத்து, இந்தச் சக்திகள் நமது சமூகத்தின் அமைப்பையே சீரழித்து, நாம் அனைவரும் வளர்ச்சி அடையப் போவதைத் தடுக்கின்றன என்று நீங்கள் வெளிப்படையாகக் குறிப்பிட்டதை நாங்கள் பாராட்டுகிறோம்.
‘பலஸ்தீனத்தில் இஸ்ரேலின் இனப்படுகொலை’ என்று நன்கறியப்பட்ட விடயத்தையும், பலஸ்தீன மக்கள் அனுபவிக்கும் கடுமையான அநீதிகளையும் நீங்கள் தெளிவாகக் குறிப்பிட்டது, மனிதநேய மதிப்புகளையும் மனித கண்ணியத்தையும் பாதுகாப்பதில் எங்கள் நாட்டின் உறுதியான நிலைப்பாட்டைக் காட்டுகிறது. காசாவில் நடக்கும் பேரழிவைப் பற்றி நீங்கள் இதயபூர்வமாகக் கவலை தெரிவித்ததும், உலக மக்கள் முன் உடனடிப் போர் நிறுத்தம் மற்றும் நடவடிக்கை எடுக்குமாறு நீங்கள் அழைப்பு விடுத்ததும் நீண்ட நாட்களுக்கு நினைவில் இருக்கும்.
ஐ.நா. பொதுச் சபையில் நீங்கள் முன்வைத்த இந்த ஊக்கமூட்டும் செய்தி, சர்வதேச சமூகத்தின் முன்னால் நமது நாட்டின் மதிப்பையும் நற்பெயரையும் கணிசமாக உயர்த்தியுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.-Vidivelli