– இஸ்மதுல் றஹுமான் –
எதிர்கால சந்ததியினருக்கு நாமும் நல்ல விடயங்களை விதைத்துவிட்டுச் செல்ல வேண்டும். அப்படிச் செய்தால்தான் அடுத்த பரம்பரையினருக்கும் நல்லதை பெற்றுக்கொள்ள முடியும் என தேசிய ஒருங்கிணைப்பு பிரதி அமைச்சர் முனீர் முலப்பர் நீர்கொழும்பு பெரியமுல்லை அஹதிய்யா பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போது போது கூறினார்.
அல் ஹிலால் மத்திய கல்லூரி கேட்போர் கூடத்தில் அப்துல் ஹலீம் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பிரதி அமைச்சர் முனீர் முலப்பர் தொடர்ந்து உரையாற்றுகையில் அஹதிய்யா பாடசாலைகளுக்கு சொந்தமாக இடம் இருக்காது. பாடசாலைகள், பள்ளிவாசல்கள், பொது நிறுவனங்கள் என்பவற்றின் தயவிலேயே நடத்தி வருகின்றனர். நிரந்தரமான ஆசிரியர் குழாமும் இருக்காது. நானும் உயர் தரம் படிக்கும் போதும் உயர் கல்வி கற்கும் வேளையிலும் அஹதிய்யா பாடசாலை ஆசிரியராக செயல்பட்டள்ளேன்.
அத்தனகல்லையில் இலக்கிய விழாவில் கலந்துகொண்ட போது பாடல் ஒன்றைக் கேட்டேன். அது மாங்காய் விதயை விதைப்பது தொடர்பான பாட்டனுக்கும் பேரனுக்கும் இடையிலான சம்பாஷனை.
நீங்கள் கஷ்டப்பட்டு பூமியை தோண்டி மாங்காய் விதயை நடுகிறீர்கள் உங்களுக்கு அதன் பிரயோசணத்தை பெறமுடியுமா? என வினவுகிறான் பேரன். முதுமையில் துன்பப்பட்டு வேதனைக்கு மத்தியில் மாவிதயை நடும் உங்களுக்கு மாம்பழம் சாப்பிட கிடைக்குமா என்பதே சிறுவனின் கேள்வி.
இது உணர்த்துவது எமது மூதாதயர்கள் எதிர்கால இளம் சந்ததியினரின் நலன்கருதியே எதையும் செய்தார்கள். எமது நாட்டு அன்பான மக்கள் சிந்தித்தது, தன்னைப் பற்றி மட்டுமல்ல பிள்ளைகளின் எதிர்காலம் பற்றியுமாகும்.
எதிர்கால சந்ததியினருக்கு நாமும் நல்ல விடயங்களை விதைத்துவிட்டுச் செல்ல வேண்டும். அப்படிச் செய்தால்தான் அடுத்த பரம்பரையினருக்கும் நல்லதை பெற்றுக்கொள்ள முடியும்.
முஸ்லிம், பெளத்த, கத்தோலிக்க, இந்து சமய பாடசாலைகளிலும் விலைப்பது நல்ல விடயங்களையே. எதிர்காலப் பிள்ளைகளின் நலனுக்கான விலைநிலமே இந்த சமய பாடசாலைகள். எதிர்காலத்தின் நல்ல சமுதாயத்தை உருவாக்க சிறந்த இடம் இப் பாடசாலைகள்.
2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் இந்த அஹதிய்யா பாடசாலையை தொடர்ந்து நடாத்திச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இலங்கையர் என்ற முறையிலும் முஸ்லிம்கள் என்ற ரீதியிலும் இந்த நாட்டின் வரலாற்றில் நாம் எப்போதும் இந்த நாட்டு மக்களுக்கு கை நீட்டி சமாதானமாக, ஒற்றுமையாக, சகோதரத்துவத்துடன் வாழ வேண்டும் என்ற கொள்கையுடன் வாழ்ந்து வந்த முஸ்லிம்களாவர்.
2019ல் நடந்த சம்பவத்தை எச்சந்தர்பத்திலும் சம்பவம் நடந்த வேளையிலும் அதற்கு பின்னரும் எந்தவொரு முஸ்லிமும் அதனை அங்கீகரிக்கவும் இல்லை. அதனை வன்மையாக கண்டித்ததுடன் அச் சம்பவத்துடன் தொடர்புபட்ட எவரையும் ஞாபகபடுத்தும் சந்தர்பங்களில் எல்லாம் அவர்களுக்கு சாபம் உண்டாவதாக என்ற நிலைப்பாடிலே இருந்தோம். அதனால்தான் முஸ்லிம்களை அடக்கம் செய்யும் மையவாடிகளில் அவர்களை அடக்கம் செய்ய அனுமதிக்கவில்லை.
இப்பகுதியை சேர்ந்த 450-500 மாணவர்கள் சிங்கள மொழியில் படிக்கிறார்கள். அவர்களுக்கும் சமயக் கல்வி கட்டாயம் தேவை. அந்த சந்தர்பத்தில் கல்வித் துறையில் இருத்தவர்கள் செய்யக்கூடாத ஒரு விடயத்தை செய்தார்கள். சமயம் கற்கும் சந்தர்பத்தை தவித்தார்கள், நிறுத்தினார்கள்.
அந்த வேளையில் இப்பிரதேசத்தில் உள்ள குழுவினர் ஒன்றுசேர்ந்து சவால்கள் வரும்போது அதனை எதிர்கொள்ள புதிய கதவுகளை திறக்க வேண்டும்.
2019ல் அஹதிய்யா பாடசாலை மூடப்பட்ட போது மீண்டும் அதனை உருவாக்கி பிள்ளைகளுக்கு தேவையான மார்க்க விடயங்களை கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு அஹதிய்யாவை ஆரம்பிக்க உறுதுனையாக இருந்து அதற்காக பாடுபட்ட அனைவருக்கும் இறைவன் அருள்பாளிக்க வேண்டுமென நான் பிரார்த்திக்கிறேன்.
சிறு பிள்ளைகளை தூக்கமாக்குவதற்கு முதியோர் சிறுவர்களுக்கு கதை சொல்வார்கள். பாட்டன் தனது பேரனுக்கு கதை கூறும்போது மகனே உனது உடலில் இரண்டு ஓநாய்கள் உள்ளன.ஒன்று கெட்ட ஓநாய் மற்றது நல்ல ஓநாய் அவை இரண்டும் போட்டி போடுகின்றன. கெட்ட ஓநாய் கோபம், சோம்பல், பொறாமை, பீதி ஆகியவற்றிற்காக போட்டியிடுகின்றது. நல்ல ஓநாய் கருனை, பொறுமை, கஷ்டப்பட்டு வேலை செய்தல், தைரியம் என்பவற்றிற்காக போட்டி இடுகின்றது. சிறுவன் கேட்கிறான் இதில் வெற்றிபெற்றது யார் என்று.
பாட்டன் கூறுவது போல் நீங்கள் எந்த ஓநாயை போஷிக்கிறீர்களோ அதுதான் வெற்றிபெறும். கடந்த காலங்களில் ஆட்சியாளர்களும் பாதால உலகம், போதைப் பொருள் என்பவற்றை போஷித்து வந்தார்கள். அவை நாட்டில் மேலால் இருந்தன. இதனால் தாய்மார்கள் தினமும் அழும் சப்தம் எமக்குக் கேட்கின்றன.
நாம் அரசாங்கம் என்ற முறையில் எப்போதும் அந்த மோசமான கெட்ட ஓநாயை வளர்ப்பதை விட அதிகாரத்திற்கு வரும்போது கூறிய ஐக்கியம், ஒற்றுமை, அன்பு கருணை என்பன அவசியம் என்பதை உணர்த்தி அந்த நல்ல ஓநாயை போஷித்து வளர்த்து வெற்றிபெற்றோம். கெட்ட ஓநாயை தோல்வி அடையச் செய்தோம் என்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். சமயப் பாடசாலைகளுக்கும் அதனை செய்யமுடியும் என்றார்.