கேப் வெர்டே (Cape Verde) அணி திங்களன்று எஸ்வதினி அணியை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தி, 2026 பிபா உலகக் கிண்ணத்துக்கு தகுதி பெற்றது.
சிறிய தீவுக்கூட்ட நாடு முதல் முறையாக உலகக் கிண்ணத்துக்கு தகுதி பெற்றதைத் தொடர்ந்து, திங்களன்று (13) கேப் வெர்டேவின் தலைநகரான பிரியாவின் தெருக்கள் ஒரு திருவிழாக் கோலமாக மாறியது.

செனகல் கடற்கரையில் அமைந்துள்ள கேப் வெர்டே, உலகத்தின் பார்வையில் ஆப்பிரிக்காவை பிரதிநிதித்துவப்படுத்தும் மிகக் குறைந்த மக்கள்தொகை கொண்ட நாடாகும்.
அங்கு வெறும் 550,000 மக்கள் மட்டுமே உள்ளனர்.
2018 இல் 350,000க்கும் அதிகமான மக்களுடன் ஐஸ்லாந்துக்குப் பின்னர் உலகக் கிண்ணத்தை எட்டிய இரண்டாவது குறைந்த மக்கள்தொகை கொண்ட நாடாக இது மாறியது.
அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள 10 தீவுகளைக் கொண்ட ஒரு தீவுக்கூட்டமான கேப் வெர்டே, 1975 இல் போர்ச்சுகலிடமிருந்து சுதந்திரம் பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
