கேரளாவில் ஏற்பட்ட மண்சரிவில் ஒருவர் உயிரிழப்பு! – Athavan News

கேரளாவின் அடிமாலியில் பலத்த மழையின் போது ஏற்பட்ட நிலச்சரிவில் தம்பதியர்கள் சிக்கிக்கொண்ட நிலையில் ஒருவர் மீட்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இடுக்கி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இடைவிடாது பெய்துவரும் கன மழையினால் அங்குள்ள அடிமாலியில் நிலச்சரிவு ஏற்பட்டது.

இந்த நிலச்சரிவில் தேசிய நெடுஞ்சாலையோரம் இருந்த வீடு ஒன்று நேற்றிரவு இடிந்து விழுந்துள்ளது.

இதில் வீட்டில் இருந்த கணவன் , மனைவி இருவர் சிக்கிக் கொண்டுள்ளார்.

இதையடுத்து தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர், பேரிடர் மீட்பு படையினரும் விரைந்து மீட்பு பணிகளை முன்னெடுத்த நிலையில் சுமார் 7 மணித்தியால போராட்டத்தின் பின்னர் இருவரு மீட்கப்பட்ட நிலையில் படுகாயமடைந்த அவரது கணவர் வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ள நிலையில் அவரது மனைவி தற்போது சிகிச்சை பெற்றுவருகின்றார்.

இதேவேளை, தேசிய நெடுஞ்சாலையோரம் சாலை விரிவாக்கத் திட்ட பணிகளுக்கு குறித்த வீட்டின் அருகே இருந்த பெரிய பாறை ஒன்று இடிக்கப்பட்ட நிலையில் அதனால் ஏற்பட்ட நிலச்சரிவே இந்த சம்பவத்துக்குக் காரணம் என்று அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.

மேலும், இந்த சம்வத்திற்கு முன்னதாக, அருகில் உள்ள 22 குடும்பங்கள் சரியான நேரத்தில் அங்கிருந்து வெளியேற்றப்பட்டமையினால் இடம்பெறவிருந்த பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

நன்றி

Leave a Reply