கொழும்பில் உள்ள காசல் வீதி மகளிர் மருத்துவமனையில் புதிதாக நிறுவப்பட்ட விந்தணு வங்கி மூலம் 10 பெண்கள் வெற்றிகரமாக கருத்தரித்துள்ளதாக மருத்துவமனை பணிப்பாளர் அஜித் குமார தன்தநாராயன தெரிவித்தார்.
குறித்த விந்தணு வங்கி நிறுவப்பட்டு சுமார் ஆறு மாதங்கள் ஆகின்றன.
இந்த வங்கியில் தானம் செய்பவர்களின் பல நோய்களுக்கான முறையான மருத்துவ பரிசோதனைகளை நடத்திய பிறகு, அவர்களின் விந்தணு வங்கியில் சேமிப்பில் வைக்கப்படுவதாக மருத்துவமனை பணிப்பாளர் தெரிவித்தார்.
பின்னர் தந்தையர்கள் மீண்டும் தொடர்புடைய சோதனைகளுக்கு அழைக்கப்படுகிறார்கள் என்றும், அந்த சோதனைகள் மூலம் அவர்களின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்திய பிறகு, விந்தணு சேமிப்புக்கு தயார் செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இருப்பினும், இந்த காலகட்டத்தில் விந்தணுவை சேமிக்க திரவ நைட்ரஜன் பயன்படுத்தப்படுவதால், அதிக செலவுகள் ஏற்பட்டுள்ளதாகவும் பணிப்பாளர் தெரிவித்தார்.
மூன்று மாதங்களுக்குப் பிறகு பரிசோதனைக்காக மீண்டும்வரும் விந்தணுக்களை தானம் செய்யும் தந்தையர்களிடம் ஒரு குறிப்பிட்ட பலவீனம் இருப்பதாகவும், அதை உடனடியாகத் தடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
இருப்பினும், கொழும்பு காசல் வீதியில் உள்ள மகளிர் மருத்துவமனையில், இந்த திட்டம் பெரும் வெற்றியைக் காண்பிப்பதாகவும், இந்த திட்டத்திற்காக பல கோரிக்கைகள் முன்வைக்கப்படுவதாகவும் தெரிவித்த அவர், ஏராளமான நன்கொடையாளர்களும் முன்வருவதாகவும் மருத்துவமனை பணிப்பாளர் அஜித் குமார தன்தநாராயன தெரிவித்தார்.