“சமகால சோதனைகளும், நமது ஈமானிய பாதுகாப்பும்”

1. தெஹிவளை எபனேஸர் ப்ளேஸில் அமைந்துள்ள மஸ்ஜிதுர் ரஹ்மானில் அஷ்ஷேக் முர்ஷித் அப்பாஸி அவர்கள் “சமகால சோதனைகளும் நமது ஈமானிய பாதுகாப்பும்” என்ற தலைப்பில் சிறந்த உரையொன்றை நிகழ்த்தினார்.

2. அந்தக் குத்பாவில் இன்று மத்திய கிழக்கில் நடைபெறும் யுத்தத்தை ஒரு முஸ்லிம் எவ்வாறு அணுக வேண்டும், எமது பரம எதிரிகளான அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடர்பில் நாம் எவ்வாறு நடக்க வேண்டும், இஸ்லாமிய சமூகத்துக்கு காலாகாலமாக துரோகம் இழைத்து வரும் ஈரானை நாம் நேசிக்கலாமா, அவர்களின் வரலாற்றுத் துரோகங்கள் என்ன, அவர்களின் கொள்கை என்ன, அரபு நாடுகளின் தவறான ஆட்சியாளர்கள் குறித்து இஸ்லாம் கூறும் அறிவுரை என்ன போன்ற உள்ளடக்கங்களுடன் குத்பா சிறப்பாக அமைந்தது. 

3. ஜும்ஆ குத்பாவும் தொழுகையும் உரிய நேரத்தில் சிறப்பாக முடிவடைந்ததும், மௌலவி அவர்களின் கருத்தில் முரண்பட்ட சிலர் தெளிவு கேட்டபோது, மிம்பருக்கு அருகில் அமர்ந்து முர்ஷித் அப்பாஸி விளக்கம் வழங்கினார்.

4. அப்போது அங்கு வந்த மௌலவி பீஜே அவர்களின் நிலைப்பாடே நேர்வழி; அதுவே நம் வழி என்ற நிலைப்பாட்டில் இருந்த சிலரும், ஜமாஅத்தே இஸ்லாமியைச் சேர்ந்த சிலரும் சத்தமாக கேள்விகள் எழுப்பினர். அதற்கும் முர்ஷித் அப்பாஸி ^ பதிலளித்தார். பின்னர் ஷேக் உணவிற்காக மேல்மாடிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதற்கிடையில் முரண்பட்டோர் கூட்டமாக பள்ளிக்குள் கூச்சலிட்டுக் கொண்டிருந்தனர்.

5. அவதூறு பரப்பி பொய்ப்பிரச்சாரம் செய்பவர்கள் கூறுவதுபோல், ஷேக் அவர்கள் பள்ளியை விட்டு பின்வாசல் வழியாக வெளியேற்றப்படவோ அல்லது தப்பிச் செல்லவோ இல்லை. அந்தப் பள்ளிக்கு ஒரே ஒரு வாசல் மட்டுமே உள்ளது. ஷேக் அவர்கள் இறுதிவரை பள்ளியினுள் இருந்துவிட்டு, தமது மகனுடன் முன்வாசல் வழியாக வெளியேறும் வீடியோ தெளிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறிப்பு: இங்கு பதிவிடப்பட்ட தகவல் 100% உண்மையானது என்பதற்கு மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளியின் CCTV வீடியோக்கள் அழியாச் சான்றாகும். இன்ஷா அல்லாஹ், அவை விரைவில் வெளியிடப்படும்

அவதூறு பேசி அடுத்தவர்களை கேவலப்படுத்த நினைப்போர் நிச்சயமாக மறுமையில் மலை அளவு நன்மைகளுடன் வந்தாலும் சுவர்க்கம் செல்ல முடியாது. அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள். எதைப் பற்றிய அறிவு உங்களுக்கு கிடையாதோ அதைப் பற்றி பேசி பாவிகளாக ஆகிவிடாதீர்கள்.

விமர்சகர்களே! 

அறிந்து கொள்ளுங்கள் — மஸ்ஜிதுர் ரஹ்மான் அல்லாஹ்வை மாத்திரம் வணங்கி வழிபட கட்டப்பட்ட பள்ளிவாசல். அல்லாஹ்வின் திருப்தியே இப்பள்ளிவாசலின் இலக்காகும். எனவே மக்களின் சுய விருப்பு–வெறுப்புகளுக்காக மார்க்கத்தை மறைத்து சரிசெய்தல் (அஜஸ்ட்மென்ட்) செய்ய வேண்டும் என நினைப்போர், அதற்கு உங்கள் அமைப்புகளைச் சார்ந்த வணக்கஸ்தலங்களைத் தெரிவு செய்து கொள்ளுங்கள். இங்கே வந்து பிரச்சினைகளை உருவாக்க முயலாதீர்கள். இது குர்ஆன்–சுன்னா அடிப்படையில் செயல்படும் மஸ்ஜிதுர் ரஹ்மான் ஆகும்.

நட்புடன் :

அல் ஹாபிழ் இன்திகாப் உமரீ

தெஹிவளை

2026/04/04

நன்றி

Leave a Reply