சித்திரவதை முகாம் உரிமையாளர்களும், கொலைகாரர்களின் பிள்ளைகளும் பாராளுமன்றத்தில் இருக்கின்றனர்

தனிப்பட்ட சித்திரவதை முகாம்களின் உரிமையாளர்களும், கொலைகாரர்களின் பிள்ளைகளும் இந்த பாராளுமன்றத்தில் இருக்கின்றனர். அவர்களுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை எடுத்து கைதுசெய்வோம். 88/89 காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சியில்  இருந்த எம்.பிக்கள், அமைச்சர்கள் தனிப்பட்ட சித்திரவதை முகாம்களை வைத்திருந்தனர் என்பது புதிய விடயமா? குண்டுத்தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் நபர் ஐக்கிய தேசியக் கட்சியில் கண்டியில் தேர்தலில் போட்டியிட்டார். 88/89 காலத்தில் 60 ஆயிரம் பேர் வரையில் கொல்லப்பட்டனர். சித்திரவதை முகாம்களை நடத்தினர். பெயர் மட்டுமல்ல. நீதிமன்ற நடவடிக்கை ஊடாக இவர்களை கைது செய்வோம் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (23)  கூறுகையிலேயே சபை முதல்வர் இவ்வாறு தெரிவித்தார்.

நன்றி

Leave a Reply