சிம்பாப்வே சுற்றுப் பயணத்துக்கான ஒருநாள் தொடருக்கான இலங்கை அணியை ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.
சரித் அசலங்க தலைமையிலான இந்த அணியில் 16 இலங்கை வீரர்கள் பெயரிடப்பட்டுள்ளனர்.
வெள்ளைப் பந்து கிரிக்கெட் தொடருக்காக இலங்கை அணி நாளை சிம்பாப்வே நோக்கி புறப்படவுள்ளது.
இந்தத் தொடரில் இலங்கை அணி இரண்டு ஒருநாள் போட்டிகளிலும், மூன்று டி:20 போட்டிகளிலும் சிம்பாப்வே அணியுடன் விளையாடும்.
ஹராரேயில் ஆகஸ்ட் 29 ஆம் திகதியுடன் ஆரம்பமாகும் முதலாவது ஒருநாள் போட்டியுடன் தொடர் ஆரம்பமாகும்.