விண்வெளி ஆராய்ச்சியில் புரட்சி செய்து வரும் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) நிறுவனம், தனது கவனத்தை இப்போது செவ்வாய் கிரகத்திலிருந்து நிலவின் பக்கம் திருப்பியுள்ளது. மனித நாகரிகத்தின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதே தங்களது முதன்மை நோக்கம் என்றும், அதற்கு நிலவே அதிவேகமான வழி என்றும் மஸ்க் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு 10 நாட்களுக்கு ஒருமுறை விண்கலங்களை அனுப்ப முடியும். பயண நேரம் வெறும் 2 நாட்கள் மட்டுமே!
கிரகங்கள் சரியாக நேர்கோட்டில் அமையும் 26 மாதங்களுக்கு ஒருமுறை மட்டுமே பயணம் சாத்தியம். பயண நேரம் 6 மாதங்கள்.
நிலவு மிக அருகில் இருப்பதால், அடிக்கடி பயணங்களை மேற்கொண்டு கட்டுமானப் பணிகளை மிக வேகமாகச் செய்ய முடியும்.
“நமது உணர்வையும் உயிரையும் நட்சத்திரங்கள் வரை கொண்டு செல்வதே எங்களின் லட்சியம்” என மஸ்க் உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார். 

The post செவ்வாய்க்கு முன்னால் நிலவில் நகரம்! ஸ்பேஸ்எக்ஸின் அதிரடி மாற்றம் appeared first on Global Tamil News.
