சௌமியா சர்மாவின் வெற்றிக் கதை

கடின உழைப்பாலும், விடா முயற்சியினாலும் வெறும் நான்கு மாதங்களில் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற சௌமியா சர்மாவின் வெற்றிக் கதை தான் இது.

இந்தியாவின் தலைநகரான டெல்லியை சேர்ந்த செளமியா சர்மா தன்னுடைய 16 வயதிலேயே காது கேட்கும் திறனை படிப்படியாக இழந்ததால் “காது கேட்கும் கருவியின்” உதவியுடனே தனது பள்ளி படிப்பை முடித்தார்.


பள்ளி படிப்பை அதிக உற்சாகத்துடன் முடித்த செளமியா, டெல்லியில் உள்ள தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் இணைந்து தனது இளங்கலை பட்டத்தை பெற்றார்.


தனது கல்லூரி பட்டப்படிப்பின் போதே, காது கேளாதோரின் இட ஒதுக்கீட்டிற்காக அப்போதைய தலைமை நீதிபதிக்கு நேரடியாக கடிதம் ஒன்றை எழுதினார்.


அப்போது மாற்றுதிறனாளிகளுக்கான இட ஒதுக்கீட்டில் கண் பார்வை குறைப்பாடு உள்ளவர்களும், உடல் ஊனமுற்றவர்களும் மட்டுமே பயன்பெற்று வந்த நிலையில், செளமியாவின் இடஒதுக்கீடு கோரிக்கையை எந்தவொரு சட்ட போராட்டங்களும் இல்லாமல் நீதிபதி ஜி. ரோஜினி நிறைவேற்றினார்.


கல்லூரி படிப்பை முடித்த செளமியா ஷர்மா, 2017ம் ஆண்டுக்கான UPSC தேர்வில் களமிறங்கினார். தேர்வுக்கு நான்கு மாதங்கள் மட்டுமே மீதம் இருந்த நிலையில், தன்னுடைய சரியான திட்டமிடல் மற்றும் தினமும் 6 முதல் 6 மணி நேர கடின உழைப்பின் காரணமாக முதல் முயற்சியிலேயே முதல்நிலை தேர்வில் வெற்றி அடைந்தார்.


தொடர்ந்து விடாமல் போராடி செளமியா, தனது உடல்நிலை குன்றிய இருந்த போதிலும் இரண்டாம் கட்ட தேர்வில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார்.


தான் போராடி பெற்ற மாற்றுதிறனாளிகளுக்கான இடஒதுக்கீடு வாய்ப்புகள் இருந்த போதிலும், அதனை பயன்படுத்தாமல் பொது பிரிவின் கீழ் போராடி UPSC தேர்வில் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்று இந்திய அளவில் 9வது இடத்தை பிடித்து சாதனை படைத்தார்.


நாக்பூரில் துணை ஆணையராக(DCP) உள்ள செளமியா ஷர்மா, மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி அர்ச்சித் சந்தக்கை திருமணம் செய்து செய்துள்ளார்.

நன்றி

Leave a Reply